Salem

News April 1, 2024

வெறிநாய் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி.

image

தேவூர் அருகே ஆலத்தூர், ரெட்டிபாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் ஆடு, கோழிகளை வெறி நாய் கடித்து வருகிறது. நேற்று காலை ரெட்டிபாளையம் காக்காயன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு சொந்தமான 5 செம்மறி ஆடுகளை வெறி நாய் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகளும் பலியானது . இதனால் கால்நடைகளை கடித்து வரும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 31, 2024

சேலத்தில் வெயில் 103.7 டி.கி.ரி.யாக அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச். 31) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News March 31, 2024

சேலம்: பறக்கும் படையினர் தீவிர சோதனை

image

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளுக்கடை , பூலாம்பட்டி கொங்கணாபுரம் , மூலப்பாதை, செட்டிமாங்குறிச்சி, சித்தூர் மற்றும் எடப்பாடி புறவழிச் சாலை ஆகிய பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 31, 2024

சேலத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்

image

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் எடப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2018 பேர் அதிகமாக உள்ளனர். 8,23,336 ஆண் வாக்காளர்களும், 8,25,354 பெண் வாக்காளர்களும், 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளனர்.

News March 31, 2024

சேலம்: ரயில் ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு ரத்து!

image

கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மற்றும் ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதன் காரணமாக சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண். 16212 பயணிகள் ரயிலானது வரும் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

News March 30, 2024

சேலம் அருகே மாணவி செய்த செயல்

image

எடப்பாடி அருகே உள்ள அரியாம்பாளையம் பகுதியில் +1 படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது . தேர்வு நடைபெறும் நிலையில், படிப்பில் மகள் கவன குறைவாக இருப்பதாக கூறி தாய் கண்டித்ததால் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

News March 30, 2024

குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்.

image

சேலம் மாவட்டத்தில் உள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் நவீன லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி காடையாம்பட்டி, இளம்பிள்ளையில் 23ஆம் தேதி, கருமந்துறையில் 24ஆம் தேதி, மகுடஞ்சாவடியில் 25ஆம் தேதி, நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30ஆம் தேதி குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

News March 30, 2024

சேலத்தில் தமிழக முதல்வர் வாக்கு சேகரிப்பு

image

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதி ஆதரித்து இன்று சேலம் உழவர் சந்தை மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களிடம் தமிழக முதல்வர் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற வேட்பாளர் டி எம் செல்வ கணபதி ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் அருகில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 30, 2024

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் முதல்வரை சந்தித்தார்.

image

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ள பிரச்சாரத்திற்காக சேலத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதி முதல்வருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார். மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

சேலம் வந்தார் கமலஹாசன்

image

நாளை நடைபெறவுள்ள சேலம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கமல்ஹாசன் இன்று சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். இன்று ஈரோட்டிலும் நாளை சேலத்திலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று சேலத்திற்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!