India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையில் இருந்து 60% பீர் விற்பனை கூடியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையாததால் பீர் விற்பனை அதிகாரிக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 3 மாதத்தில் வாகன சோதனை நடத்தியதில் செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வந்த 115 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழப்பு ஏற்படுத்திய 76 பேர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான இடங்களில் சேலம் 3வது இடம் பிடித்துள்ளது. சேலத்தில் நேற்று(ஏப்.23) அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோடை காலம் ஆரம்பித்து வெயில் கொளுத்தும் நிலையில் ஆங்காங்கே வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி நாட்டிலேயே வெப்பநிலையில் ஈரோடு 3வது இடம்(நேற்று முன்தின நிலவரப்படி) பிடித்திருந்த நிலையில், சேலம் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஆத்தூர், ஏற்காடு, சங்ககிரி, மேட்டூர் மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வெப்ப அலை வீசி வருவதால், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எடப்பாடி அருகேயுள்ள இருப்பாலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(50). இவருக்கும், உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகன் தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.23) காலை கோவிந்தனிடம் முருகன் மற்றும் அவரது மகன்
தாமோதரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் கோவிந்தனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் (23.04.2024) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கு முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம், கஞ்சமலை மேல் சித்தர் கோயில் கஞ்சமலை கோயிலுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியில் பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மர்ம நபர்கள் மலை உச்சியில் தீ வைத்ததால் தீ பரவி வருவதையொட்டி பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
எடப்பாடியில் தேவகிரி அம்பாள், நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி கலந்து கொண்டு
திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி வட்டாரத்தில் முகாமிட்டு அனுபவப் பயிற்சி பெற்று வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள், வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று புவி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கு, கருத்துரை வழங்கினர். தலைமை ஆசிரியர் சந்திரசேகர், ஆத்மா துணை மேலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.660 அடியாக குறைந்ததால் நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை முழுதும் வெளியே தெரிகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பண்ணவாடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலையை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.