India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழரின் கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோருக்கு திருவள்ளுவர் திருநாளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்பவர்களுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நவ.19ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் நவ.18ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடக்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அஸ்தம்பட்டி, தும்பிப்பாடி, ஆத்தூர், நத்தக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, கொங்கணாபுரம், மேச்சேரி, ஓமலூர், எடப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 15,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. குறைந்த வாடகையில் செயல்படும் இதில் தற்போது, சிறப்பு சலுகையாக 2 வாரம் வரை வாடகையின்றி விளைபொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் சேலம், வாழப்பாடி,ஆத்தூர், கெங்கவல்லி,தம்மம்பட்டி, கருமந்துறை, கொங்கணாபுரம்,மேச்சேரி, ஓமலூர்,எடப்பாடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில்15,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட17 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. மிகக்குறைந்த வாடகையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.சிறப்பு சலுகையாக 2வாரம் வரை வாடகையின்றி விளைபொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம்

வானமே எல்லை திட்டத்தின் கீழ் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 28 குழந்தைகள் சென்னையில் இருந்து சேலத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் விருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு சாக்லேட் எழுதுபொருட்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்வில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் போலி ஆதார் அட்டையை கொடுத்து தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஜாபர் அகமது (40) என்பவரை கன்னங்குறிச்சி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகர பகுதிகளான ஈரடுக்கு பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், பட்டைக்கோவில், கடைவீதி, முதல் அக்ரஹாரம், கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, 5 ரோடு, 4 ரோடு உள்ளிட்டப் பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.

சேலத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் திமுக-வில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளராகவுள்ளார். இவர் நவ.12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், பலரிடம் ரூ.10லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சேலத்தில் கந்து வட்டி கொடுமையால் திமுக நிர்வாகி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டி மற்றும் கலை விழா ‘சோனா சேம்ப்ஸ்-24’ வருகின்ற நவ.29ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான போஸ்டர் வெளியீட்டு விழா கல்லூரி நூலக அரங்கில் இன்று (நவ.13) நடைபெற்றது. இவ்விழாவில், பேச்சுப்போட்டி, இசை, வினாடி- வினா, பாட்டுப்போட்டி, ஓவியப் போட்டியும் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.