Salem

News May 2, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலில் வெளியே செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்ததால், தற்போது மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 2, 2024

சேலத்தில் வெறிச்சோடிய சாலைகள்

image

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இன்று சேலம் கடைவீதி சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சாலையோர கடைகளில் விற்பனை சரிவர இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளனர்.

News May 2, 2024

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

சேலம் மாவட்டத்திற்கு இன்று(மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிடுக!

image

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, ஏற்காடு தனியார் பேருந்து விபத்தில் பலியான 5 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் என அரசின் சார்பில் நிதியுதவி வழங்கவும், உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

News May 2, 2024

ஏற்காட்டில் தயாராகும் 30,000 மலர் செடிகள்

image

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் 2 மாதத்திற்கு முன்பே 30 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் பூக்கள் பூத்து கோடை விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பல வகையான பூச்செடிகளில் பூக்கள் மலர தொடங்கி உள்ளன. இந்த செடிகளை சுற்றுலா பயணிகள் நேற்று ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.

News May 2, 2024

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

image

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குடிநீர் தேவைக்கான தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று(மே 1) காலை 6 மணி முதல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

ஏற்காடு பேருந்து விபத்து! அதிவேகம் தான் காரணம்

image

சேலம், ஏற்காட்டில் நேற்று பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 5பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மலைப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்ல வேண்டும். ஆனால், ஓட்டுநர் ஜனார்த்தனன் 50 கி.மீ வேகத்தில் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர்.

News May 1, 2024

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம்- விருதாச்சலம் பயணிகள் ரயில் கடலூர் துறைமுகம் வரை நாளை முதல் நீடித்து இயக்கப்படுகிறது. சேலம் ஜங்ஷனில் மாலை 6.20 மணிக்கு புறப்படும் ரயில் ஆத்தூர் வழியாக விருத்தாச்சலத்திற்கு இரவு 9 மணிக்கும் கடலூர் துறைமுகத்திற்கு இரவு 10.25 மணிக்கும் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் அதிகாலை 5 மணிக்கு கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்படும் ரயில் சேலம் ஜங்ஷனுக்கு காலை 9 மணிக்கு வரும் என அறிவித்துள்ளது. 

News May 1, 2024

ஏற்காடு விபத்து: உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்!

image

மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்ட செய்தியில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்து அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

ஏற்காடு செல்ல கட்டுப்பாடு: மாவட்ட காவல்துறை

image

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு, அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!