India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(மே – 03) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலத்தில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியே செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவு தண்ணீரை அடிக்கடி பருக வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் உப்பு சர்க்கரை கரைசல் நீரை குடிக்கலாம் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சேலத்தில் சங்ககிரி சதுக்கம் என்ற மலை மேல் அமைந்துள்ளது சங்ககிரி கோட்டை. சங்கு வடிவ இக்கோட்டை விஜயநகர பேரரசரால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கொங்குநாட்டிற்கான வரி வசூல் கிடங்காக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. மன்னர் திப்பு சுல்தானின் முக்கியமான படைத்தளமாகவும், பின்னர் ஆங்கிலேயர்களின் படைத்தளமாகவும் இருந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை இங்கு தான் தூக்கிலிடப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் வெப்ப அலை பாதிப்பு இன்றும்(மே 3) அதிகரிக்க கூடும் என்பதால், பொதுமக்கள் வெப்ப அலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். தர்பூசணி, முலாம்பழம், நுங்கு, வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழங்களையும், நீர் சத்து காய்கறிகளையும் அடிக்கடி உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திகின்றனர்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கனூர் பாலத்தின் அடியில் இன்று(மே 3) 2 ஆண் மற்றும் 1 பெண் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் 3 சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திற்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாதாகப்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணியம்(33), கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணன்(21), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஸ்(23) ஆகியோர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். 3 பேரையும் கைது விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மே 2ம் தேதி(நேற்று) மாலை முதல் 3ம் தேதி(இன்று) மாலை வரை சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2-ம் தேதி மாலை முதல் 3-ம் தேதி மாலை வரை சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோம் நிறுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா ஏத்தாப்பூர், பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், லாரி டிரைவர். இவரது மனைவி பச்சியம்மாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிரிந்த துக்கத்தில் இருந்த ஜெயபிரகாஷ் நேற்று(மே 1) மதியம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மகள், மகன் உள்ளனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.