Salem

News March 17, 2024

சேலம்: இந்த எண்களில் புகார் அளிக்கலாம்!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவது குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7020, 0427-2450031,0427-2450032, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9489939699 என்ற வாட்ஸ்-ஆப் செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என சேலம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா பெறலாம்!

image

சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வட்டம், சேலம் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இணையதளம் வழியாக பட்டாவிற்கு விண்ணபிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று‌ தெரிவித்துள்ளார்.‌ மக்கள் பத்திர பதிவு ஆவணங்களை கொண்டு நகர நிலவரித்திட்ட அலகு 1,2,3 மற்றும் 4ல் தனி வட்டாட்சியர் வழியாக பட்டா பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News March 16, 2024

சேலம் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை!

image

சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று அதிகபட்சமாக 101.5 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

News March 16, 2024

சேலத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று(மார்ச்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News March 16, 2024

சேலம் அருகே சாலை மறியல்

image

சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

News March 16, 2024

சேலம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 105 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!