India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (நவ.28) முதல் டிச.07 வரை அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு அலுவலர்கள், பணியாளர்களுக்கு இணைப்பதிவாளர் அருளரசு அறிவுரை வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களது விவரங்களை https://labour.tn.gov.in/ என்ற முகவரியில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும். இதுதொடர்பாக, டிச.03 டு ஜனவரி வரை இளம்பிள்ளை, ஏற்காடு, குரங்குச்சாவடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் இடங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

➤காலை 10 மணிக்கு வழக்கறிஞர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரி நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் போராட்டம். ➤அதானீயை கைது செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம். ➤மாலை 5 மணிக்கு காவல்துறையை கண்டித்து கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். ➤மாலை 6 மணிக்கு எருமாபாளையம் ஸ்ரீராமானுஜர் மணி மண்டபத்தில் திருப்பவித்ரோத்ஷவம் வைபவத்திற்காக யாகசாலை துவக்கம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பிப்பாடி, ஆடையூர், தேவூர் ஆகிய துணை மின்நிலையத்தில் இன்று (28.11.24) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மக்களே, உங்க ஏரியாவில் மின்தடை என்றால் கமெண்ட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக ஹைதராபாத்- கோட்டயம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07135/07136) இயக்கப்படவுள்ளது. டிச.03,10,17,24,31 தேதிகளில் ஹைதராபாத்தில் இருந்தும், மறுமார்க்கத்தில், டிச. 04,11,18,25, ஜன.01 தேதிகளில், கோட்டயத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, வரும் டிச.05 முதல் ஜன.10 வரை வரை சேலம் வழியாக எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி- கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07313/07314) இயக்கப்படுகிறது. வாரத்தில் வியாழன்கிழமைதோறும் எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளியில் இருந்தும், வெள்ளிக்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், முதல் நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்திக்கு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, லஞ்ச ஒழிப்பு போலீசாரால், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இடைத்தரகர் முருகமணி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் புத்தகத் திருவிழா 2024-ல் பங்கேற்கும் விருந்தினர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நவ.29-ல் மதுரை ராமகிருஷ்ணன், நவ.30 நாஞ்சில் நாடன், டிச.1 பவா செல்லத்துரை, டிச.2 யுவன் சந்திரசேகர், டிச.3 ஆனந்தகுமார் இ.ஆ.ப, டிச.4 பெருமாள் முருகன், டிச.5 சித்ரா பாலசுப்ரமணியம், டிச.6 முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, டிச.7 விஷ்ணுபுரம் சரவணன், டிச.8 ரேவதி, டிச.9 ஜீவானந்தம் கருத்துரை வழங்கவுள்ளனர்.

சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக கர்நாடகா மாநிலம், பெலகாவி- கொல்லம் இடையே டிச.09 முதல் ஜன.14 வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் (07317/07318) இயக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள்கிழமைதோறும் பெலகாவியில் இருந்தும், மறுமார்க்கத்தில், செவ்வாய்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும்.
Sorry, no posts matched your criteria.