Salem

News May 18, 2024

சேலம் மழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

image

சேலம், முட்டல் நீர்வீழ்ச்சியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வந்த நிலையில் பொதுமக்கள் குளித்து வந்தனர். இதனை அடுத்து குற்றாலத்தில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து இன்று முதல் முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News May 18, 2024

சேலம்: சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

சேலம் கோட்டத்தில் இருந்து முக்கிய தினங்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றும் (மே.18), நாளையும் (மே.19) வார இறுதி நாட்கள் (ம) 19ந் தேதி வளர்பிறை முகூர்த்த தினம் வருகிறது. இதை முன்னிட்டு இன்று முதல் 20ந் தேதி வரை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

News May 18, 2024

குரூப்-4 மாதிரி தேர்வு

image

சேலம், கோரிமேட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உள்ளது. இந்த மையத்தில் தற்போது டிஎன்பிஎஸ்சி., டிஆர்பி., போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் (மே.17) நேற்று மாதிரி தேர்வு நடைபெற்றது.

News May 17, 2024

அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் (மே17) இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. அப்போது, “தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் தனி கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு ஆட்சியர் தெரிவித்தார்.

News May 17, 2024

ஏற்காடு மலைப்பகுதியில் உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகள்

image

கடந்த சில நாட்களாக சேலம் மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி நீர்வீழ்ச்சியில் குளித்தும், புகைப்படங்களை எடுத்தும் மகிழ்கின்றனர்.

News May 17, 2024

சேலம்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை சேலத்தில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

பெரியார் பல்கலை.யில் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் – எதிர்ப்பு!

image

சேலம் பெரியார் பல்கலை. ஓய்வுபெற்ற பதிவாளர் தங்கவேலுவுக்கு ரூ.1 லட்சம் ஓய்வூதியம் வழங்க பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராசிரியர்கள், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரூ.1 லட்சம் ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

News May 17, 2024

முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

image

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.

News May 17, 2024

சேலம்: மழைக்கு வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சேலத்தில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!