India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03326) இன்று (நவ.30) மதியம் 12.55 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், 11.20 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களது பயண திட்டத்தை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.

மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று (நவ.30) மாலை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை, மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம், சேலம்- சென்னை, சென்னை- சேலம் இடையேயான விமான சேவையை இன்று (நவ.30) ரத்துச் செய்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஜன., 24 தேசிய பெண் குழந்தை தினத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மூலம், வீர தீர செயல் புரிந்து வரும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கப்படும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள், டிச.25 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படும்.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவெடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதவிர சேலம் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஊரில் மழையா கமெண்ட் பண்ணுங்க.

1.’சேலம் புத்தகத் திருவிழா 2024′ தொடங்கியது!
2.தீக்குளிக்க முயற்சி: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு
3.தலைவாசலில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி
4.சேலம்: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
5.சேலம் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
6.சேலம் வழியாக செல்லும் ரயிலில் எல்எச்பி பெட்டிகள்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நவம்பர் 29 இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில், சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சேலம் புத்தக திருவிழா 2024’ சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், தமிழ் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சிகளை பொதுமக்கள், வாசகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

பஹ்ரைன் நாட்டில் நவ.23 -நவ.27 வரை நடந்த உலக அளவிலான 1-வது பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், சேலத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட தமிழ்நாடு அணி சார்பில் 14 பேர் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி 7 பதக்கங்களை வென்றனர். இதில் சேலத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் இன்று ஊர் திரும்பிய வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று முதல் 2ஆம் தேதி வரை முக்கிய நகரங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வணிக பயன்பாட்டுக்கு உள்ள கட்டடங்களுக்கு கொடுக்கும் வாடகையில் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரியைத் திரும்பப் பெறக்கோரி, சேலம் மாவட்டத்தில் இன்று (நவ.29) முழு நேர கடையடைப்புப் போராட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு வணிகர் சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் இன்று கடையடைப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.