India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை, மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம், இரண்டாவது நாளாக இன்றும் (டிச.01) சேலம்- சென்னை, சென்னை- சேலம் இடையேயான விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/check-flight-status.html என்ற இணையதளத்தை அணுகலாம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கள்ள நத்தம் முட்டல் பகுதியில் ஆனைவாரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறையினர் நீர்வீழ்ச்சி மற்றும் பூங்காவை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சேலத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 4ஆவது நாளான இன்று எழுத்தாளர் மோசஸ் எழுதிய இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் வாழ்க்கை சரித்திர நூலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி அனுசியா வெளியிடுகிறார். இதில்மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி பெற்றுக் கொள்கிறார். மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலத்துறை மூலம் 10-ம் வகுப்பு முதல், முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு பயிற்சிக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, டிச.3-ல் காலை 10 மணிக்கு, அயோத்தியாப்பட்டணம் கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதில் பழங்குடியின இளைஞர்கள் கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் டிச.1ஆம் தேதி இன்று முக்கிய நிகழ்வுகள். 1)காலை மணி எருமாபாளையம் ராமானுஜர் மணி மண்டபம் விழா. 2) காலை ஓய்வு பெற்ற பெற்ற பேரூராட்சி பொதுக்குழு கூட்டம் ஏவிஆர் மண்டபத்தில் காலை 10 மணி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு காலை விழிப்புணர்வு. 3)காலை புதிய பேருந்து நிலையத்தில் எய்ட்ஸ் தின விழா. 4) சேலத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.

ஃபெங்கல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காமலாபுரம், செம்மாண்டப்பட்டி, காருவள்ளி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

1.சேலம் மாவட்டத்தில் இன்று அமாவாசையை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
2.சேலம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
3.தந்தை மகள் காதலை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
4.பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான பயிற்சி முகாம்
5.பட்டாசு வெடித்ததில் தீ – உடல் கருகி சிறுமி உயிரிழப்பு
6.சேலம்: ரூ.1 லட்சம் பரிசு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 30இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், குண்டுக்கல் கிராமத்தை சுற்றியுள்ள தொப்பூர், பையுரான்கொட்டாய், ஜோடுகுளி, வணம்கொண்டாமலை, குல்லக்கவுண்டனூர், பழையூர், மூலக்கடை, கொண்ரெட்டியூர், குப்பநாயக்கனூர், ஒலக்கூர், தளவாய்ப்பட்டி, தீவட்டிப்பட்டி, எலத்தூர் பகுதிகளில் இன்று மதியம் 2 மணி முதல் அடைமழை பெய்து வருகிறது.

சேலம் அயோத்தியபட்டினம் கஸ்தூரி திருமண மண்டபத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வருகின்ற 3ஆம் தேதி வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/VettriNichayamskill இணையதளம் மற்றும் 9442617066 என்ற எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.