Salem

News March 23, 2024

சேலத்தில் எலுமிச்சம்பழம் விலை உயர்வு

image

மராட்டிய மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வரக்கூடிய எலுமிச்சம்பழம் கடந்த சில மாதங்களாக வராத காரணத்தினால் ஆந்திராவில் இருந்து மட்டுமே எலுமிச்சை விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக எலுமிச்சையின் விலை 8 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று சேலம் மாவட்டத்தில் ஒரு மூட்டை எலுமிச்சை 3, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News March 23, 2024

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட மல்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம்-கரூர் ரயில் 06837 இன்று முதல் 30ம் தேதி வரை மாலை 06.00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 07.00 மணிக்கு புறப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில், கரூர்-சேலம் ரயில் 06838 கரூரில் இரவு 07.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இரவு 09.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

சேலம்: திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

சேலம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ இக்கூட்டத்தில் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பகுதி வாரியாக தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

News March 22, 2024

சேலம் : அதிமுக வேட்பாளர் விபரம்

image

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பி.விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். பெயர்: பி.விக்னேஷ், வயது: 31 கல்வித்தகுதி: பொறியியல் பட்டதாரி ஊர்: திண்டமங்கலம், தொழில்: விவசாயம் கட்சிப் பதவி: ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர். குடும்பம்: தந்தை பரமசிவம் (ஓமலூர் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத் தலைவர், தாய் தனபாக்கியம் திண்டமங்கலம் ஊராட்சித் தலைவர். மனைவி பிரியா, மகள் ரேஷ்னிகா (1).

News March 22, 2024

சேலம்: 27 பேரின் லைசென்ஸ் ரத்து!

image

சேலம் சரகத்தில், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 மாதத்தில் மட்டும் போதையில் வாகனம் ஓட்டிய 27 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 49 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

சேலம் பாமக வேட்பாளர் அறிவிப்பு

image

சேலம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ந.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 22, 2024

சேலம்: உடனே ஒப்படைக்க உத்தரவு!

image

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, துப்பாக்கி உரிமதாரர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கீடு

image

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாமகவுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்‌ சேலம் மாவட்ட பாமக‌ நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே சேலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

News March 21, 2024

சேலம்: ரூ.4.75 லட்சம் பறிமுதல்

image

சேலம் மாவட்டம் நாழிகல்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் பிரகாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.4.75 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சேலம் தெற்கு வட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 21, 2024

தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு
மங்களூருவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு மார்ச் 22ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!