Salem

News March 24, 2024

சூட்கேசில் பெண் சடலம் இருவர் கைது

image

ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20-ஆம் தேதி சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், கொலை செய்யப்பட்ட பெண் தேனியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. கத்தாரில் வேலை பார்த்தபோது நடராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கோவையில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்றனர். போலீசார் விசாரணையில் நடராஜன் மற்றும் நண்பர் கைது.

News March 24, 2024

சேலத்தில் 30ம் தேதி கமல் பிரச்சாரம்

image

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 29ஆம் தேதி ஈரோட்டிலும், சேலத்தில் 30ம் தேதியும், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

News March 24, 2024

20,000 பேர் அஞ்சல் வாக்கு அளிக்க ஏற்பாடு!

image

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுபவர்கள், பறக்கும் படையினர், மண்டல அளவிலான நுண் பார்வையாளர்கள் என தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 20,000 மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

News March 24, 2024

சேலத்தை வாட்டி வதைக்கும் வெயில்

image

சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில் நேற்று 101.7 டிகிரி ஆக உயர்ந்துள்ளது. உஷ்ணத்தை உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியேறி சீக்கிரத்திலேயே களைப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

News March 24, 2024

சேலம்: சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி

image

சேலம் மாவட்டம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில்
உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் சுவாமியை வணங்கி அங்குள்ள பொது மக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியசோரகை ஊர் பொதுமக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News March 24, 2024

சேலத்தில் 102 டிகிரி வெயில்

image

தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் நேற்று கொளுத்தியது. அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

News March 24, 2024

தொழில்நுட்பத் திருவிழா‘24 டெக்பெஸ்ட் ’24’ !

image

சேலம் ஏவிஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நேற்று
ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம், தொழில்நுட்பத் திருவிழா‘24 – டெக்பெஸ்ட் ’24’ நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் ராஜ விநாயகம் தலைமையில்,
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழும், பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.

News March 23, 2024

டி.எம்.செல்வகணபதிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

image

சேலத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார். அதில்
டி.எம்.செல்வகணபதி யார் என்று உங்களுக்கு தெரியும். கட்சி மாறியதால் தான் அவர் அனுபவசாலி. அ.தி.மு.க.வால் தான் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் போன்ற பதவிகள் கிடைத்தன; சேலம் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

News March 23, 2024

கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை

image

கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை; கூட்டணி இல்லையென்றாலும் சொந்தக்காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க. முக்கிய காரணம்’ என்று சேலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டியளித்தார். உடன் முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 23, 2024

சேலம்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக சேலம் தொகுதியில் விக்னேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.‌ இந்நிலையில்‌ இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‌அனைத்து மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.‌ இதில் சேலம் மாவட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர்களான‌ வெங்கடாசலம், இளங்கோவன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரான செல்வராஜ் ‌ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!