Salem

News May 29, 2024

சேலம் 1008 சிவலிங்க கோயில் சிறப்பு!

image

சேலம், அரியனூரில் அமைந்துள்ள 1008 லிங்கம் கோவில். இக்கோயில் விநாயகா மிஷனால், 2010ல் கட்டப்பட்டது.
இக்கோயிலில் மூலவரை சுற்றி, கோயில் முழுவதும், 1007 சிவலிங்கங்கள் உள்ளன. மேலும், இங்கு புனித பசு நந்தியின் சிலை உள்ளது. மலையடிவாரத்தில் பெரிய விநாயகர் சிலையும் உள்ளது. இங்கு சங்ககிரி மலையை காணமுடியும். பிராதான லிங்கத்தின் உயரம் சுமார் 17 மீட்டராக உள்ளது.

News May 29, 2024

சேலம்: 100 கோடி மோசடி செய்தவர் கைது

image

சேலம் சுற்று வட்டார பகுதிகளில் எஸ்விஎஸ் நகை கடை நடத்தி வந்த சபரி சங்கர் என்பவர் பொதுமக்களிடம் 100 கோடி பணத்தை வசூல் செய்து விட்டு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தலை மறைவானார். இதுகுறித்து பொதுமக்கள் சேலம் தருமபுரி ஆகிய பகுதியில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சபரி சங்கரை தேடி வந்த நிலையில் புதுச்சேரியில் அவரை இன்று கைது செய்துள்ளனர்.

News May 29, 2024

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் சிலுமலையில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் நாட்டு ரக பாக்குச்செடி , மல்லிகை செடி, எலுமிச்சை செடி உள்ளிட்டவைகளும் , மருத்துவக் குணம் வாய்ந்த செடிகளும் விற்பனைக்கு தயாராக உள்ளது.
விவசாயிகள் நேரில் வந்து பார்வையிட்டு செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என பண்ணை மேலாளர் மதுமிதா தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

சேலத்தில் 151 பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து!

image

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி ஓட்டுதல் உள்ளிட்ட விதி மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 4 மாதத்தில் செல்போன் பேசிய படி வாகனங்கள் இயக்கிய 151 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News May 28, 2024

சேலத்தில் ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் கைது

image

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக்கூறி ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த பிடிஎம் குரூப் ஆஃப் நிறுவனம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது. கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து 3000 பேரிடம் பணமோசடி செய்ததாக புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

News May 28, 2024

சேலம் மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு

image

சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொலைபேசி அழைப்பு மூலம் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகவல்லி தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

மருந்து கடைகள் மீது நடவடிக்கை

image

சேலத்தில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 2 மருந்துக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 7 கடைகளுக்கு ரூ.6.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 4 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News May 28, 2024

குலுக்கல் மூலம் இன்று மாணவர் சேர்க்கை

image

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு 324 தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகளில் 4,126 இடங்களுக்கு 8,126 குழந்தைகளின் பெற்றோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் இன்று குலுக்கல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.

News May 28, 2024

பைக்கில் வந்த வாலிபர் கீழே விழுந்ததில் பலி

image

தம்மம்பட்டி, நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர் யுவராஜ். இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் நாகியம்பட்டியில் இருந்து மல்லியகரை நோக்கி வந்து
கொண்டிருந்தார். கந்தசாமி புதூர் ஆஞ்சநேயர் கோவில்
அருகில் வந்த போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில்
இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News May 28, 2024

டாஸ்மாக் கடையை காலி செய்ய கோரிக்கை

image

கெங்கவல்லி, கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அரசு மதுபான கடை உள்ளது. இதன் கடை கடந்த 9 வருடங்களாக இயங்கி வந்த நிலையில், இடத்தின் உரிமையாளர்கள் கடையை காலி செய்யுமாறு மனு அளித்தனர். மனு அளித்து 2 வருடம் ஆகியும் கடை காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில், நேற்று அரசு மதுபான கடைக்கு மது பாட்டில் இறக்க வந்த லாரியை இறக்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் சமாதானம் பேசினார்.

error: Content is protected !!