India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் ஜூன் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் செயல்பட்டு வரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் என அனைத்தும் மூட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நேற்று (மே.31) பெய்த மழையளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்காடு ISRO AWS பகுதியில் 4 செ.மீட்டரும், ஏற்காட்டில் 3 செ.மீட்டரும், சந்தியூர் KVK AWS, சேலம் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழை பதிவாவது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் தொடர்ந்து கோடை மழை கொட்டியது. ஏற்காடு சேர்வராயன் மலையில் பெய்த பலத்த மழையால் வனப்பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி, கொடி தாவரங்கள் துளிர்த்து தழைத்து, பச்சைப் பசேலென கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வன விலங்குகளுக்கு போதிய தண்ணீர் பசுந்தீவனம் கிடைத்துள்ளது.
ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் மற்றும் பொட்டியபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான கருப்பூர் குள்ளகவுண்டனூரை சேர்ந்த சாரதியை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
சேலம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஆத்தூர் தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த முருகன்(36) என்பவர் தனியார் பேருந்தை ஆத்தூர் நோக்கி ஒட்டி கொண்டிருந்த போது சுங்கச்சாவடியில் மதுபோதையில் பைக்கில் வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டு இரும்பு ராடால் ஓட்டுனரை வலது கையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏத்தாப்பூரில் உலகிலேயே மிக உயரமான 146 அடி முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதை ஒட்டி நேற்று ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம சமுத்திரம் கிராமத்தில் முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் பாரம்பரிய நெல் வகைகளும் ஆமணக்கு உளுந்து கண்காட்சியில் இடம்பெற்றது. இதில் சுற்றுவட்டார விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் ஜூன் 8- ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் விரைவாக சமரசம் முறையில் தீர்வு காணலாம். இதில் சமரசம் செய்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.