Salem

News June 4, 2024

ELECTION: சேலத்தில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் மொத்தம் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் க. மனோஜ்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019இல் சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன், 11.76% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கேஆர்எஸ் சரவணன், 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் செல்வகணபதி, அதிமுக சார்பில் P.விக்னேஷும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?

News June 3, 2024

உறுதி செய்யப்பட்ட சிறுத்தையின் நடமாட்டம்

image

காடையாம்பட்டி தாலுகா காரவள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பசுமாட்டை மர்ம விலங்கு ஒன்று அடித்து கொன்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். வனத்திறையினர் அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்தனர். அதில் நேற்று இரவு மீண்டும் ஒரு மாட்டை சிறுத்தை அடித்து கொன்று சாப்பிடும் காட்சிகள் பதிவானது. இதில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News June 3, 2024

ஏற்காடு மலையில் 7 இடங்களில் சிக்னல் 

image

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் ஏற்காடு மலைப்பாதையில் மொபைல் சிக்னல் கிடைக்கும் 7 இடங்கள் அடையாளம் தெரிந்துக்கொள்ளும் வகையில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் சம்பந்தமான புகைப்படங்களை தெரிவிக்கவும் வனத்துறையினரின் தொலைபேசி எண்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

News June 3, 2024

மேட்டூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் 

image

விடுமுறை நாளான (ஜூன்.2) நேற்று மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் பூங்காவிற்கு சென்று பொழுதை போக்கினர். சிறுவர், சிறுமிகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி ஆனந்தமாக விளையாடினர். சிலர் மேட்டூர் அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அணையின் வலது கரை பகுதியிலுள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை கண்டுகளித்தனர்.

News June 2, 2024

சேலம்; இன்றைய வெப்ப நிலவரம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-02) மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News June 2, 2024

இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர்

image

சேலம் 4 ரோடு பகுதியில் நேற்றிரவு பிரியா என்ற இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை அருகில் இருந்த பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் கணவர் இறந்த பிறகு கோகுல் என்ற வாலிபருடன் பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென கோகுலுடன் பழகுவதை பிரியா நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கோகுல் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

News June 1, 2024

சேலத்திற்கு நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் ஜூன் 1,2,3,4 ஆகிய நான்கு நாட்கள் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சேலம் மாவட்டத்தில் வெப்ப தாக்கம் குறைந்மு சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளார் சேலம் மண்டல கவியானந்த் இன்று தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், ஜூன் 13ல் புதுச்சேரி- மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஜூன் 15ல் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 3 ரயில்களும் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News June 1, 2024

டாஸ்மாக் கடை மூட உத்தரவு

image

சேலம் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் ஜூன் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்புகளில் செயல்பட்டு வரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் என அனைத்தும் மூட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!