Salem

News June 5, 2024

இலவச மருத்துவ முகாம்

image

வாழப்பாடி அரிமா சங்கம், உதய மருத்துவமனை இணைந்து நேற்று சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இம்முகாமில், அரிமா சங்க மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் டாக்டர் மோதிலால் தலைமையிலான குழு, 150 பேருக்கு பரிசோதனை செய்தது. இலவசமாக மருந்து, மாத்திரைகள், மதிய உணவு வழங்கப்பட்டது. முதல் உதவி தலைவர் பெரியார்மன்னன், உதயா மருத்துவமனை மேலாளர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.

News June 4, 2024

மின் கம்பத்தில் தொங்கியபடி உயிரிழந்த ஊழியர்

image

வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(43). மின்வாரிய ஊழியரான இவர், பழுதடைந்த மின் இணைப்பை சீரமைக்க இன்று மாலை கம்பத்தில் ஏறிய போது, மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே தொங்கியபடி உயிரிழந்தார். இவரது உடலை மீட்ட வாழப்பாடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News June 4, 2024

சேலம் திமுக வேட்பாளர் வெற்றி

image

சேலம் நாடாளுமன்ற தொகுதியின் இறுதி சுற்று முடிவில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 5,62,020 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 4,92,958 வாக்குகளும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர் பாமக அண்ணாதுரை 1,25,829 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ் குமார் 75636 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் டி எம் செல்வ கணபதி 69,0062 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

News June 4, 2024

சேலத்தில் கடும் பின்னடைவு

image

சேலம் மக்களவை தொகுதியில் தற்போது வரை திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 306387 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 257972 பின்னடைவை சந்தித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 48415 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

சேலம்:ஆறாவது சுற்று நிலவரம்

image

சேலம் மக்களவை தொகுதியில் 4-வது சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 163762 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 140378 பின்னடைவை சந்தித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 23384 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலை.

News June 4, 2024

சேலம்:நான்காவது சுற்று நிலவரம்

image

சேலம் மக்களவை தொகுதியில் 4-வது சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 107884 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 95437 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 12447 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலை.

News June 4, 2024

சேலம்: திமுக முன்னிலை

image

சேலம் மக்களவை தொகுதியில் திமுக 30256 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 23740 ஓட்டுகளும், பாமக 8121 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 3957 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.

News June 4, 2024

வாக்கு மையத்தில் மயங்கி விழுந்த காவல் உதவி ஆய்வாளர்

image

சேலம் கருப்பூர் அரசு பொறியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக காவலர்கள் (ம) அதிகாரிகள் அவரை மீட்டு 108 வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடல் சோர்வு (ம) வயிற்றுப்போக்கின் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

News June 4, 2024

எடப்பாடியில் அதிமுக ஏறுமுகம்

image

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இங்கு அதிமுக 4012 வாக்குகளும், திமுக 2646 வாக்குகளும் பெற்றுள்ளன. அதிமுக 1366 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையுடன் திகழ்கிறது.

News June 4, 2024

சேலம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

error: Content is protected !!