India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம், நெத்திமேடு ஜங்ஷன் பகுதியில் (01.04.2024) நேற்று மாலை பறக்கும் படை அதிகாரியான தலைவாசல் வேளாண் துறை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்த 7 கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுக்கு தேவையான முத்து மற்றும் கொக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.74 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம், மேட்டூர் வட்டம், வனவாசி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜோதிபாசு தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளம்பிள்ளையில் இருந்து நங்கவள்ளி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி ரூ.2 லட்சம் மதிப்பிலான 75 விலை உயர்ந்த புடவைகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது. அதனை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல்-01) மாவட்டத்தில் அதிகபட்சமாக 102.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம் மண்டல டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இடத்தை பொறுத்து ரூ.1 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை விற்பனை நடக்கிறது. தேர்தல் காரணமாக வழக்கத்தை விட 30 % கூடுதலாக விற்பனையாகி வரும் நிலையில், ஒரு தனி நபருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் மதுபானங்களை விற்கக் கூடாது என இன்று(ஏப்.1) சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவுறுத்தி உள்ளனர்.
தேவூர் அருகே ஆலத்தூர், ரெட்டிபாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் ஆடு, கோழிகளை வெறி நாய் கடித்து வருகிறது. நேற்று காலை ரெட்டிபாளையம் காக்காயன்காடு பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு சொந்தமான 5 செம்மறி ஆடுகளை வெறி நாய் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகளும் பலியானது . இதனால் கால்நடைகளை கடித்து வரும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச். 31) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளுக்கடை , பூலாம்பட்டி கொங்கணாபுரம் , மூலப்பாதை, செட்டிமாங்குறிச்சி, சித்தூர் மற்றும் எடப்பாடி புறவழிச் சாலை ஆகிய பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் எடப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2018 பேர் அதிகமாக உள்ளனர். 8,23,336 ஆண் வாக்காளர்களும், 8,25,354 பெண் வாக்காளர்களும், 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மற்றும் ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதன் காரணமாக சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண். 16212 பயணிகள் ரயிலானது வரும் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.