Salem

News June 11, 2024

சேலத்தில் பதிவான வெயிலின் தாக்கம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.11) மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News June 11, 2024

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு..!

image

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 118வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ஜூன் 11 – ஜூன் 14 வரை சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 13ல் புதுச்சேரி-மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 15ல் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

சேலம்: செக் மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறை!

image

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்று காசோலை கொடுத்துள்ளார். பணம் கொடுக்காததால் 2022 ஆம் ஆண்டு ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், செக் மோசடி வழக்கில் அபராதத்துடன் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி ஆத்தூர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் தீர்ப்பு வழங்கினார்.

News June 10, 2024

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்து

image

சேலம் மாநகரத்தில் பணிபுரியும் 51 தலைமை காவலர்கள், சிறப்புக்காவல் உதவி ஆய்வாளர்களாக (SSI) பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேற்படி பதவி உயர்வு பெற்ற சிறப்புக்காவல் உதவி ஆய்வாளர்கள் இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா.விஜயகுமாரி, வாழ்த்து பெற்றனர். மேலும் அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

News June 10, 2024

கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு

image

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. முதல் நாளான இன்று சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் இக்கலந்தாய்வில் பங்கேற்று தங்கள் விருப்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.

News June 10, 2024

சேலத்தில் வர்த்தக உரிமம் கட்டாயம்

image

சேலம் மாநகராட்சி பகுதிகளில் வர்த்தம், வணிகம், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களால் நடத்தப்பட்டு வரும் நிறுவனத்திற்கு, சேலம் மாநகராட்சி ஆணையாளரால் வழங்கப்படும் வர்த்தக உரிமத்தை கட்டாயம் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மனு செய்து மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி வணிக உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 10, 2024

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

image

சேலம் மாநகர தீவிர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வந்த போது லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. விசாரணையில் உள்துறை செயலாளர் அமுதா அவரை பணிநீக்கம்  செய்ய கமிஷனருக்கு  உத்தரவிட்டார். இதனையடுத்து சேலத்தில் பணியாற்றி வந்த கணேசனை கமிஷனர் விஜயகுமாரி பணி நீக்கம் செய்துள்ளார்.

News June 10, 2024

அரசு பள்ளி மாணவிக்கு கல்வி உதவி

image

சங்ககிரி கல்வி அறக்கட்டளை சார்பில் சங்ககிரி அரசு மகளிர் மேல் நிலைபள்ளியில் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் பொந்துகிணறு பகுதியை சேர்ந்த மாணவி வர்ஷினிக்கு ஒரு வருடத்திற்கு தேவையான நோட்ஸ் மற்றும் நோட்டுகள் இன்று டிரஸ்ட் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் வரதராஜ், சண்முகம், ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 9, 2024

சேலத்தில் கடும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.9) மாவட்டத்தில் அதிகபட்சமாக 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News June 9, 2024

சேலத்தில் குரூப் 4 தேர்வு தொடங்கியது

image

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுக்காவிற்குட்பட்ட
270 தேர்வு மையங்களில் 361 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வை 1 லட்சத்து 6 ஆயிரத்து 82 பேர் எழுதுகின்றனர்.

error: Content is protected !!