Salem

News June 13, 2024

சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா

image

சேலத்தில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 880 கோடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவியுடன் தொழில் முனைவோர்கள் பங்களிப்புடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி பூங்கா மூலம்  1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்புள்ளது.

News June 13, 2024

சேலம் நீதிமன்றத்தில் முதல்முறையாக திருநங்கை வழக்கறிஞர்

image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை வழக்கறிஞர் பத்மலட்சுமி சேலம் நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காக தமிழகத்திற்க்கு வந்துள்ளார். திருநங்கைகள் வீட்டில் அடைந்து இருக்காமல் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என அவர் கூறினார். சேலம் நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் வழக்கில் வாதாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தின் சார்பில் பெங்களூரு, சென்னை, ஓசூர், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in. மற்றும் tnstc செயலி மூலம் இன்று முதல் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம்.

News June 13, 2024

சேலத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 13, 2024

305 பள்ளிப் பேருந்துகளை இயக்கத் தடை

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 305 தனியார் பள்ளி பேருந்துகளை இயக்கத் தடை விதித்து, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர கால வழி உள்ளிட்டவைக் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

சேலம்: 5 பேர் பலியான விபத்தில் ஒருவர் கைது

image

சேலம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது தனியாா் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனங்களில் சென்ற இரு குழந்தைகள் உள்பட 5 போ் பலியாகினா். முதற்கட்ட விசாரணையில், தனியாா் பேருந்து வேகமாக வந்ததுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. வேகத்தடை போடப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் அதன்மீது ஏறியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News June 12, 2024

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

image

சேலம் அருகே சுக்காம்பட்டி இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும், விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

சேலம் அருகே விபத்து 5 பேர் பலி

image

சேலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில், 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆச்சாங்குட்டப்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில், 2 டூவீலர்கள் சிக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஒரு ஆண், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News June 12, 2024

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 13 பயணிகள் ரயில்கள், சிறப்பு எண்களுக்கு மாற்றாக ஜூலை 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் பழைய எண்களிலேயே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், பொதுப் போக்குவரத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், பயணிகள் ரயில்கள், சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு, சிறப்பு எண்களுடனும், சிறப்பு கட்டணத்துடனும் இயக்கப்பட்டன.

News June 12, 2024

சேலத்தில் தக்காளி விலை உயர்வு

image

சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து இன்று வாழப்பாடி உழவர் சந்தையில், தக்காளி 1 கிலோ 50 முதல் 55 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோவிற்கு 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!