India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், செவிலியர் போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 15) காலை 43.10 அடியிலிருந்து 42.87 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 149 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 13.61 டிஎம்சியாக உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கோட்டை மைதானத்தில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 95.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திட்டமிட்டப்படி திறக்கப்படாததால், டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்துறை அறிவித்துள்ளது. இதன்படி “78.67 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய முறையில் 3.85 கோடியில் தரப்படும்” என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மற்றும் ஆத்தூர் வட்டாரத்தில் 2 மையம் செயல்பட்டு வருகின்றன. விருப்பமுள்ளவர்கள் ஜூன் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உங்கள் சுயவிவரத்தை மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக பாட்னாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாட்னா – மங்களூரு இடையே வரும் 15, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், பாட்னாவில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.13) மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம்: தொப்பூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகளால் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொன்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் ஆகிய பகுதிகளில் நாளை (14.6.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின் விநியோகம் இருக்காது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்து சேவை மையத்தில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 126 சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.