India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகராட்சியில் மாதந்தோறும் இயல்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த பிப்ரவரி மாத கூட்டத்துக்கு பிறகு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால், மார்ச், ஏப்ரல், மே மாத கூட்டங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான கூட்டம் நாளை காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலக கூடத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்க உள்ளதாக கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரி எண்ணிக்கை 31 ஆக உள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி சேலம், கள்ளக்குறிச்சியில் சிகிச்சையில் இருந்த 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்தியா கூட்டணி செயல் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சேலம் ஐந்து ரோடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில், செல்வகணபதி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். உடன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் தலைமையில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் தலைவாசலில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில், இத்திட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை காவிரி ஆற்றின் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று (ஜூன் 18) நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன், கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்பணியை வரும் செப்டம்பரில் தொடங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று (ஜூன் 18) ஜமாபந்தி முகாம் தொடங்கியுள்ளது. அதன்படி, அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூன் 17) சிறுவர் சிறுமியர்கள் அனுமதியின்றி ஸ்கேட்டிங் செய்தனர். கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி ஸ்கேட்டிங் செய்தால் விபத்து ஏற்படும் என்பதை அறியாமல் ஸ்கேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தநிலையில், ஸ்கேட்டிங் பயிற்சி பெற்ற சிறுவர்களின் பெற்றோர்களுக்கு புறநகர் டிஎஸ்பி இன்று (ஜூன் 18) அறிவுரை வழங்கினார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நாளமில்லா அறுவை சிகிச்சை துறையில் புதிய புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு நோயாளிகள் பிரிவானது திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் மதியம் 12 வரை செயல்படும் என்றும், தைராய்டு, சர்க்கரை, மார்பக பாதிப்புகள் மற்றும் ஹார்மோன் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக குடிநீா் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில், தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஊரக குடிநீா் இயக்க திட்டம், நிதிக்குழு திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 6,47,476 வீடுகளில் இதுவரை 5,40,905 (83.54%) வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழை, அமைச்சா் கே.என்.நேருவிடம் காண்பித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து பெற்றாா்.
கேஸ் சிலிண்டர் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறும் என சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா அறிவித்துள்ளார். சிலிண்டர் பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகாா்கள் தொடா்பாக, அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா்கள், முகவா்கள் ஆகியோா்களைக் கொண்டு மாலை 4 மணிக்கு குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.