Salem

News March 25, 2024

சூடு பிடிக்க தொடங்கியது தேர்தல் களம் 

image

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, சேலம் தெற்கு ஒன்றியத்தில் எருமாபாளையம் ஊராட்சி, கொண்டலாம்பட்டி ஊராட்சி, வேடகாத்தான் பட்டி ஊராட்சியை சார்ந்த ஒன்றிய நிர்வாகிகளை
இந்தியா கூட்டணி சேலம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் முன்னாள் அமைச்சர், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம் செல்வ கணபதி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

News March 25, 2024

நாளை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடக்கம்.

image

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து
சேலம் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பயிலும் 22089 மாணவர்கள், 21181 மாணவிகள் என மொத்தம் 43270 பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 184 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

News March 25, 2024

சேலம் நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 27-ஆம் தேதியுடன் நிறைவுப் பெற உள்ள நிலையில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ் இன்று தனது வேட்பு மனுவை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவியிடம் தாக்கல் செய்தார்.

News March 25, 2024

சேலம் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்

image

சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். தி.மு.க வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எம்.பி.எஸ்.ஆர்.பார்த்திபன், காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News March 25, 2024

சேலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

image

கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறிய சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலை – குரங்கு பாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

News March 25, 2024

தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

சேலம்: மழை பெய்ய வேண்டி சிறப்பு பிராத்தனை

image

சேலம் மாவட்டம் சங்ககிரி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் நேற்று சிவஜெயந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைதிபெற வேண்டும், மழை பெய்ய வேண்டுமென வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது அமைப்பின் நிர்வாகிகள் அரங்கநாதன், லட்சுமி, வாசவி கிளப் மண்டலத்தலைவர் ஆனந்த், பல் மருத்துவர் அருள், ஓம்ராம் அறக்கட்டளை நிறுவனர் சுந்தரவடிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

மக்களை மிரள வைத்த இளைஞர்கள்

image

அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரத்தில் ஏவிஎஸ் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர்கள், பைக்கில் ஸ்டண்ட் அடித்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி, பார்வையாளர்களை மிரள வைத்து அசத்தினர். இந்த இளைஞர்களுக்கு பள்ளி தலைவர் ராஜவிநாயகம் , முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

News March 24, 2024

ஓவியங்களால் அழகான சேலம் 

image

சேலம் குரங்கு சாவடி மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருக்க நெடுஞ்சாலை துறையினர் தனியர் நிறுவனங்களுடன் இணைந்து ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடையை மீறி ஓவியம் வரைந்தால் நெடுஞ்சாலை துறை சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தை வண்ணமிகு சேலமாக மாற்றும் வகையில் ஓவியர்கள் வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

News March 24, 2024

சூட்கேசில் பெண் சடலம் இருவர் கைது

image

ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20-ஆம் தேதி சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், கொலை செய்யப்பட்ட பெண் தேனியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. கத்தாரில் வேலை பார்த்தபோது நடராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கோவையில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்றனர். போலீசார் விசாரணையில் நடராஜன் மற்றும் நண்பர் கைது.

error: Content is protected !!