India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் பெரமனூர் அருகே பெண்ணை கொன்று தண்ணீர் தொட்டியில் உடலை வீசிய வழக்கில், சக்திவேல் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், செய்வினை வைத்து தன் மனைவியை பிரித்ததால் கொலை செய்ததாக சக்திவேல் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்லூர் ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வருகின்ற மார்ச் 30-ம் தேதி வரை சேலம் – கரூர் ரயில்கள் இருமார்க்கத்திலும் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சேலம் – கரூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி நீண்ட நாட்களாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் அம்மாப்பேட்டை வரகம்பாடி பகுதியில் அதிகாலை 3.00 மணிக்கு சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கி கழுத்தை நெரித்து கதவில் தொங்கவிட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். மனைவி காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பயிலும் 22,089 மாணவர்கள், 21,181 மாணவிகள் என மொத்தம் 43,270 பேர் தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 181 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
தலைவாசல் நத்தகரை டோல்கேட்டில் நேற்று(மார்ச் 25) தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர் ஞானப்பிரியா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், உரிய ஆவணம் இல்லாத ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 625 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபர் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள கோவிலூர் கிராமம் செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீயானது கடந்த 3 நாட்களாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிகிறது.
வனத்துறையினர் கடுமையாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த காட்டுத் தீயினால் பல நூறு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. அங்குள்ள அரிய வகை மூலிகைகளும், பல வகையான விலங்குகளும் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன .
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து, மயில் வாகனத்தில், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை உற்சவமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். ராஜ வீதிகளில் பக்தர்கள் தாம்பூலம் கொடுத்து வரவேற்பு அளித்து வழிபாடு செய்தனர்.
சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி பூலாவரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவு இடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் என பலர் கலந்து கொண்டனர்
2024 மக்களவை தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) ஆகியவற்றை சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இப்பணியினை ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.