Salem

News March 17, 2025

அதிமுக தீர்மானத்தை புறக்கணித்த பாமக எம்.எல்.ஏ 

image

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவினர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று(மார்ச் 17) சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் சேலம் மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மற்றும் சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் ஆகிய இரண்டு பாமக எம்.எல்.ஏக்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்..

News March 17, 2025

சேலம்: ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பலாம். மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி ,சேலம்-636302. மார்ச் 24யே விண்ணப்பிக்க கடைசி நாள் 

News March 17, 2025

சேலம்: பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை 

image

மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி சேலம் மாவட்ட ஆட்சியரை இன்று(மார்ச் 17) சந்தித்து காடையாம்பட்டி பகுதி சிறுவன் மீது நடைபெற்ற சாதி வெறி தாக்குதல் குறித்து மனு வழங்கினார்.மேலும், ‘இந்த திராவிட மாடல் அரசில் பட்டியல் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 தேர்தலில் பட்டியல் இன மக்களால் ஆட்சி மாற்றம் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு இழப்பீடு வழங்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்’ என்றார்

News March 17, 2025

சேலம்: குழந்தை திருமணம் செய்தால் இதான் தண்டனை 

image

குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.மேலும்,  குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபைக் கூட்டங்களில் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

News March 17, 2025

விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்!

image

கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திடத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் தகவல்.

News March 17, 2025

மீண்டும் மன்னராட்சியா..? – ஈபிஎஸ் காட்டம் 

image

திமுக ஆட்சி ஏழை மக்களை ஏமாற்றுகிறது எனவும் இந்த ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது எனவும் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது என்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

News March 17, 2025

சேலத்தில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்

image

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் அருள். இவரது 2 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, 5 ரூபாய் நாணயத்தை சிறுவன் விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் தினேஷ்குமார் மற்றும் செந்தில்குமார் கொண்ட குழுவினர், அறுவை சிகிச்சை செய்து நாணயத்தை அகற்றினர். பெற்றோர்களே உஷார். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.

News March 17, 2025

சேலம்: அம்பேத்கர் சிலையை நோக்கி சென்ற பாஜகவினர் கைது 

image

சென்னையில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் பா.ஜ.க. அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அம்பேத்கர் சிலையை நோக்கி செல்ல முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் கைது செய்தனர்.

News March 17, 2025

சேலம்: மட மடவென எகிறும் மண்பானை விற்பனை

image

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சேலம் மாநகரப் பகுதிகளில் பல்வேறு அளவுகளில் குழாய் உடன் கூடிய மண்பானைகள், சமையலுக்கு தேவையான மண்பானை சட்டிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் மண்பானைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

News March 17, 2025

சேலம்: போராட்டம் அறிவித்த பாஜக ; போலீஸ் குவிப்பு 

image

அரசின் டாஸ்மாக் 1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பாஜக அறிவித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், உள்ளிட்ட மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!