India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று சேலத்தில் நடைபெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என்று பேசினார். மேலும் தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் உள்ள பேச்சாக இருக்கிறது என்று பேசினார் பிரதமர் மோடி.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
இன்று “சேலத்திற்கு வரும் போது பழைய நியாபகங்கள் வருகின்றன; கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; அம்மனை, காமாட்சியை சக்தி வடிவமாக நாம் வழிபடுகிறோம், தமிழக மக்கள் பெண்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள்” என்று சேலத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே என்றும், பாரத அன்னை வாழ்க’ எனவும் தமிழில் பேச்சைத் தொடங்கினார். பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டு வரவேற்றனர்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பிரச்சார வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் (19.03.2024) இன்று மதியம் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்பி ஆகியோர் சேலம் வருகை தந்துள்ளனர். இன்று காலை பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சேலத்தில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வரும் நேரத்தில் சென்னை – சேலம் விமானம் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பார்வையாளர் உட்பட அனைவருக்கும் சேலம் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் விமான நிலையம் வருகிறது.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கெஜஜல்நாயக்கன் பட்டியில் இன்று நடைபெறும் பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உறையாற்ற உள்ளார். இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து சேலம் எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை (மார்ச் 19) பா.ஜ.க. சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சேலம் வந்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.