Salem

News March 20, 2024

சேலம் திமுக வேட்பாளர் இவர்தான்!

image

சேலம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக செல்வ கணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

சேலம் அதிமுக வேட்பாளர் இவர்தான்!

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

News March 19, 2024

சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் 

image

மார்ச் 23, 30 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மார்ச் 24, 31 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மேற்படி அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் தெரிவித்தார்.

News March 19, 2024

திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது

image

இன்று சேலத்தில் நடைபெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என்று பேசினார். மேலும் தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் உள்ள பேச்சாக இருக்கிறது என்று பேசினார் பிரதமர் மோடி.

News March 19, 2024

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும்  பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

News March 19, 2024

சேலத்தில் பழைய நியாபகங்கள் வருகிறது – மோடி

image

இன்று “சேலத்திற்கு வரும் போது பழைய நியாபகங்கள் வருகின்றன; கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது; அம்மனை, காமாட்சியை சக்தி வடிவமாக நாம் வழிபடுகிறோம், தமிழக மக்கள் பெண்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள்” என்று சேலத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

News March 19, 2024

சேலம்: தமிழில் பேசிய பிரதமர் மோடி

image

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று  பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ‘எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே என்றும், பாரத அன்னை வாழ்க’ எனவும் தமிழில் பேச்சைத் தொடங்கினார். பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டு வரவேற்றனர்.

News March 19, 2024

சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி!

image

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கான, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். பிரச்சார வாகனத்தின் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

error: Content is protected !!