India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (27-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (டிச 27) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் தனித் தேர்வர்களால் பெறப்படாத 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, சேலம் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் (28.03.25) தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மார்ச் 2003 முதல் ஆகஸ்ட் 2019 வரையில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அஞ்சல் மூலம் பெறாதவர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

திருச்சி- கரூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். திருச்சியில் இருந்து அதிகாலை 05.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.20 மணிக்கு கரூர் வந்து சேரும். இரவு 08.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும் ரயில் இரவு 10.50 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சேலத்தில் தொடங்கி வைத்த திட்ட பணிகள். கடந்த 2006ஆம் ஆண்டு பிப்.4ஆம் தேதி சேலத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட மன்மோகன் சிங், சேலம் – செங்கப்பள்ளி 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு செப்.05ல் சேலத்திற்கு மீண்டும் வருகை தந்த மன்மோகன் சிங், சேலம் உருக்காலை நவீனமயமாக்கல், விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (டிச.27) நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பெரும்பாலோர் தங்களுக்கு உரிய உரங்கள் போதிய அளவு கிடைப்பதில்லை என்றும். பயிர்களுக்கு உரிய மருந்து பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் விவசாய நிலங்கள் பல பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றும் குறைகளை தெரிவித்தனர்.

சேலம் எம்.பி செல்வகணபதி, மன்மோகன் சிங் மறைவையொட்டி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக தான் இருந்தபோது 13வது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதித்துறையின் நிலைக்குழுவில் முனைவர் மன்மோகன் சிங்கும், தானும் உறுப்பினர்களாக பணியாற்றியது நெஞ்சில் நிற்கிறது. அந்நாட்கள் தன் வாழ்நாளின் என்றும் மறவாமல் நிலைத்து நிற்கும், உங்களை இழந்து நிற்கும் இவ்வேளையில் நினைவு கூறுகிறேன்.

சேலம் இன்றைய (டிச.26) முக்கிய நிகழ்வுகள்: 1)காலை 10 அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. 2)காலை 11மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம். 3) மதியம் 1 குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. 4) மதியம் 2 எரிவாயு நுகர்வோர் மாதாந்திர குறைதீர்க்க கூட்டம். 5) மாலை 4 பாரதிய ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.

தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவருக்கும் என் இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.