India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில், மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை, காடையாம்பட்டி மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், ஏராளமான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி துணி ரகங்களான ஆரணி பட்டு சேலைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்டவை பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (28-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (டிச 28) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிச.27) நடந்த தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தில் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்கிய தன்னார்வலர்கள்,தன்னார்வ அமைப்புகள்,கல்லூரி நிர்வாகத்தினரை பாராட்டி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் சான்றிதழ்களை வழங்கினார். ரத்ததானம் வழங்குவதில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மாநில அளவில் 3-ம் இடம் பெற்றது.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியில் 31.49 ஹெக்டேர் பரப்பளவில் பாப்பான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீர் வரத்து இன்றி வறண்டு புதராக காணப்பட்டது. இந்நிலையில் ஏரி பராமரிப்பு பணி நடந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, 25 ஆண்டுக்குப் பின் இன்று ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வாழப்பாடி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பகுதியில் நேற்று முதல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சேலம் (டிச.28) இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9 மணி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மாநாட்டை பேரணி கோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது. 2) 10 மணி தமிழ்நாடு கல்வி பயிற்சி மாற்றுத்திறன் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம். 3) 12 மணி அழகாபுரம் சமுதாயக்கூடத்தில் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிடுகிறார். 4) மாலை 6 மணி அத்வைத ஆசிரமத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது. எனவே, சேலம் மக்களே உங்க ஏரியாவில் எங்கு மழை என்பதை கமெண்ட் பண்ணுங்க.

வங்கியிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சைபர் குற்றவாளிகள் உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பை (Limit) அதிகரிக்க உதவுவதாகவும், அதற்கு உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள், OTP உள்ளிட்ட வங்கி சார்ந்த மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிருமாறு கேட்டால் எந்த தகவலையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம். நிதிசார் ஆன்லைன் குற்றம் பற்றிய புகாருக்கு 1930 எண்ணை அழைக்கவும்”- சேலம் மாவட்ட காவல்துறை!
Sorry, no posts matched your criteria.