Salem

News April 7, 2024

சேலம் மாவட்டத்தில் மழையா..?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

சேலம்: ஓடும் ரயிலில் 350 பவுன் கொள்ளை

image

கேரள நகை வியாபாரி ஒருவர் 350 பவுன் தங்க நகைகளுடன் திருவனந்தபுரம் – சென்னை ரயிலில் பயணம் செய்துள்ளார். இன்று(ஏப்.6) ரயில் சேலம் ஜங்ஷன் வந்தபோது, 350 பவுன் நகைகள் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 7, 2024

சேலம்: டிக்கெட் இன்றி பயணித்தோருக்கு அபராதம்

image

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 2 லட்சத்து 74 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.19 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22% அதிகம் என நேற்று(ஏப்.6) தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டிக்கெட் இன்றி முறைகேடாக பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

News April 7, 2024

சேலத்தில் ஏசி, ஏர் கூலர் விற்பனை அதிகரிப்பு

image

சேலம் மாவட்டம் முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏசி மற்றும் ஏர் கூலர் விற்பனை 30% அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1ம் தேதி 102.4 டிகிரி பதிவான நிலையில், நேற்று 106.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்றும் வாட்டி எடுப்பதால் பொதுமக்கள் குளிர்சாதன கருவிகளை நாடி வருகின்றனர்.

News April 7, 2024

சேலம்: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 6, 2024

சேலம்: கொளுத்தும் வெயில்..!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 41.2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 6, 2024

பதற்றமான வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

image

சேலம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2024

சேலம்: வெயிலின் தாக்கம் 106.2 டிகிரியாக அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல்-05) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 5, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு

image

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இன்று மேற்கொண்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், சேலம் வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News April 5, 2024

சேலம்: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதிநாள், அமாவாசை மற்றும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளதாக சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

error: Content is protected !!