India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிய உள்ள நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். மேலும் திருமண மண்டபங்கள், தனியார் தங்கும் விடுதிகள் போன்றவற்றிலும் வெளிநபர்கள் யாரையும் தங்க வைக்க கூடாது என்றும் தேர்தல் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மக்களவைத் தேர்தலையொட்டி இன்று (ஏப்ரல்.17) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் இன்று அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம் மக்களவை அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்கிறார்கள். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு தேவையில்லை, மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களின் குரலாய் அதிமுக எம்பியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த தினத்தையொட்டி இன்று சேலம் மாவட்டம், சங்ககிரியில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலையின் நினைவுத்தூண் அமைவிடம் நேற்று இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நினைவுத்தூணை கண்டு பொதுமக்கள் ரசித்தனர்.
ஆத்தூர் தேமுதிக நகர செயலாளராக சீனிவாசன் இருந்து வந்தார்.இந்த நிலையில் இன்று தேமுதிக கட்சியில் இருந்து விலகி சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர் சிவலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார். அருகில் மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் மற்றும் ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், விஜயபாஸ்கர் , கார்த்திக், விஜயகுமார் ,
ஆகியோர் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி, மற்றும் திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தார். பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டும், வாகனத்தில் சென்றபடியும் வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை சேலம் விமான நிலையத்திற்கு வந்தார். தொடர்ந்து 6.15 மணிக்கு தனி விமானத்தில் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் வேஸ்ட் என்கிறார் பாமக தலைவர் அன்புமணி; அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்ததால்தான் அன்புமணி எம்.பி. ஆனார். பாமக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும். தற்போது பதவி வேண்டுமென கூட்டணி அமைத்துள்ளார் என கூறினார்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் GPS கருவி பொருத்தும் பணி, மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்ததை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, இன்று (16.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாளே உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் வாகன சோதனை, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடியே 73 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் இரு திசைகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் கண்காணிப்பு குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மற்றும் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 12 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலத்தில் இருந்து ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.