India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம், இன்று சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சிறப்பு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு, மனு மீது உடனடி விசாரணை செய்ய உத்தரவிட்டார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

சேலத்தில் அக்டோபர் 16 வியாழக்கிழமை முகாம் நடைபெறும் இடங்கள் 1)கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலை அரங்கம் 2)துலுக்கனூர் செங்குந்தர் திருமண மண்டபம் துலுக்கனூர் 3)இடைப்பாடி மான் மார்க் திருமண மண்டபம் ஏரி ரோடு 4)காடையாம்பட்டி வார சந்தை வளாகம் சந்தைப்பேட்டை 5)கொளத்தூர் சேவை மைய கட்டிடம் பெரிய தண்டா 6)வீரபாண்டி ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம் இளம்பிள்ளை

சேலம், பள்ளப்பட்டி கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோசித்ராஜ் . இவர் (D.Pharm) படிப்பு முடித்தவர் ஆவார். வேலையில்லாமல் இருந்த இவர், சமீப காலமாக மதுவுக்கு அடிமையாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் மோசித்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மக்களே.., கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

சேலம் அருகே கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த நந்தினி (35) நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது கணவர் மோகன்ராஜ் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி, போலீசார் நந்தினியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை எனப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் Assistant Manager,Jr Engineering Associate ஆகிய பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE/ B.Tech,டிப்ளமோ படித்தவர்கள் வரும்
அக்.26 க்குள் https://sailcareers.com/SAIL2025EN01_SALEM/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்லாம்.

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் காலை 9 மணி 1) சோழிய வேளாளர் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாராயண நகர்2) காலை 10 மணி காங்கிரஸ் கட்சியின் எஸ்சிஎஸ்டி பிரிவின் சார்பில் நீதிபதியின் மீது காலணி வீசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் 3) காலை 11 மணி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.