India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட உடையம்பட்டி ஏரிக்கு அதிகப்படியான நீர் வரத்தினால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் இந்த ஏரி நிரம்பி இருந்தது. கடந்த வருடம் போதிய பருவ மழை இல்லாத காரணத்தால் இந்த ஏரி வறண்டு கிடந்தது குறிப்பிடதக்கது.

இணைப்பு ரயிலின் வருகை தாமதமாக சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- லோக்மான்யா திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (11014) இன்று (ஜன.04) காலை 08.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், 4.40 மணி நேரம் தாமதமாக நண்பகல் 01.30 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவினர், தொடர்ந்து ரயில்கள், ஸ்டேஷன்களில் பரிசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை டிக்கெட் இன்றி பயணித்தவர்கள், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றவர்கள் என ரூ.15.88 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. டிசம்பரில் மட்டும் ரூ1.96 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வரும் ஜன.12, 19 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், ஜன.13, 20 தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06089/ 06090) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

புத்திரகவுண்டம் பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி (67) என்பவரை அவரது தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் (30) கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில், செல்வராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மது போதையில் தனது சொந்த பெரியப்பாவை கழுத்தை வெட்டி கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜன.04- ஆம் தேதி கயாவில் இருந்து கோவைக்கும், ஜன.07- ஆம் தேதி கோவையில் இருந்து கயாவுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (03679/03680) இயக்கப்படுகின்றன.சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன 3) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

WhatsApp (அ) குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் APK-களை நிறுவுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். அங்கீகரிக்கப்பட்ட, பாதுகாப்பான தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யவும். ஆன்லைன் நிதி குற்றம் குறித்த புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் என சேலம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

வார இறுதி நாளை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் ஜன.06- ம் தேதி வரை 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, ஓசூரில் இருந்து சேலம், கோவை, திருப்பூர், மதுரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.