India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.660 அடியாக குறைந்ததால் நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை முழுதும் வெளியே தெரிகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பண்ணவாடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலையை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு இயக்கப்படும் ‘உதய் ஈரடுக்கு எக்ஸ்பிரஸ்’ ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் பாலக்காடு – கோவை – பெங்களூரு உதய் ஈரடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்(ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(65). இவர் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து தெரியவந்ததும் சிறுமியின் தாய் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெத்தநாயக்கன்பாளையம்: இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிமுத்து. இவரது வீட்டில், சந்தவம் என்கிற பாரம்பரிய நூடுல்ஸ் தயாரிக்க பயன்படும் 100 ஆண்டு பழமையான ‘சந்தவமனை ‘ உள்ளது. தேர்கள் செய்ய பயன்படும் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட இந்த ‘சந்தவமனை தற்போது வேறெங்கும் பயன்பாட்டில் இல்லை. இதற்கு மாற்றாக எவர்சில்வர், இண்டோலியம் , இரும்பினால் செய்யப்பட்ட சந்தவமனை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 17,18,19 என தொடர்ந்து 3 நாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு, 20ம் தேதியான சனிக்கிழமை அன்று கடைகள் திறக்கப்பட்டன. 3 நாள் விடுமுறை அடுத்து கடை திறந்ததால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் 20ம் தேதி ஒரே நாளில் ரூ.54 கோடியே 88 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்(45), விவசாயி. இவர் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை இவர் உழவர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த வாழை ரக சீப் ஒன்று மிகப்பெரிய அளவில் இருந்தது. ஒரே சீப்பில் 42 வாழைப் பழங்கள் இருந்தன. அதன் எடை 3 கிலோ இருந்தது. இது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயிலில் இறைப்பணி செய்து வந்த ராஜேஸ்வரி என்னும் யானை மறைந்து இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது. அதன் நினைவிடத்தில் 6வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம் மேயர் இராமச்சந்திரன் இதில் பங்கேற்று யானைக்கு மலரஞ்சலி செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2024 மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரை சேலத்தில் ரூ.1.78 கோடி பணம் மற்றும் ரூ.1.09 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கோடம்பாக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய விவசாய கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து செல்லப்பன் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கும், மேட்டூர் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மானை உயிருடன் மீட்டு வனபகுதியில் விட்டனர்.
Sorry, no posts matched your criteria.