India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட சளி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு ஹெச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் “பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம், பொது இடங்களில் முகக்கவசம் அணியும்படி மக்களை” தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்றிரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது மரபை மீறிய செயல். சட்டப்பேரவையை விட்டு வெளியேறியதை விட, தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேறலாம். அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் உள்ளிட்ட அனைத்தையும், அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது” என கூறினார்.

சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.06) வெளியானது. மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, சேலம் மேற்கு தொகுதி உள்ளது. 1,51,857 ஆண் வாக்காளர்கள், 1,53,973, பெண் வாக்காளர்கள், 78 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,05,908 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. ஓமலூர் தொகுதி 2-வது இடத்திலும், எடப்பாடி தொகுதி 3-வது இடத்திலும் உள்ளது.

சேலம் மறவனேரி அருகே உள்ள தொங்கு பூங்காவில் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி மற்றும் திரைப்பட நடிகர் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 3000 மேற்பட்ட மாணவ மாணவிகளிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் தேர்வான உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜன.05) நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில் 385 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட 4,299 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.06) வெளியானது. சேலம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். 14,87,707 ஆண் வாக்காளர்களும், 15,11,922 பெண் வாக்காளர்களும், 324 இதர வாக்காளர்களும் என மொத்தம் 29,99,953 இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 74,976 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பெரியார் பல்கலைக்கழகத்தில், சாதிப்போர் தமிழ் சங்கம் சார்பில், நாளை ஜன.7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள், நாட்டுப்புற கலைத் திருவிழா நடைபெற உள்ளதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, 2000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமையை காட்டவுள்ளதாகவும், அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூர் மாதையன்குட்டை அருகே வாகனங்களை நிறுத்தி பணம், நகையைப் பறிக்க சிலர் திட்டமிட்டனர். இதனையறிந்த போலீசார், மேட்டூர் பிள்ளையார் கோவில் தெரு ராமு (44), சிவக்குமார் (30), தமிழரசன்(30), பொன்னகர் ஜீவா (32), மட்டச்சாலை வல்லரசு(32) ஆகிய ரவுடிகளை கைது செய்தனர். அதேபோல், மூர்த்தி (34), நிவாஸ்(28), சுரேஷ்குமார்(35), முருகன்(32), மாதேஸ்(29) ஆகிய ரவுடிகளையும் கொளத்தூர் போலீசார் கைது செய்தனர்.

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 8 வரை 10 நாட்கள் முழு கொள்ளளவில் அதாவது 120 அடியில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீடித்தது. அதேபோல், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 20 வரை 9 நாட்களும், டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை 3 நாட்களும் முழு கொள்ளளவில் நீர்மட்டம் இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டில் 22 நாட்கள் முழு கொள்ளளவில் நீடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.