Salem

News May 14, 2024

கடிகார பழுது நீக்கம் – குறுகிய பயிற்சி

image

சேலம் அரசு ஐ.டி.ஐ.யில் ‘கடிகார பழுது நீக்கம்’ என்ற 3 மாத குறுகிய பயிற்சி நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் மே22ஆம் தேதிக்குள் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி நேரில் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 75026- 28826 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

கடிகார பழுது நீக்கம் – குறுகிய பயிற்சி

image

சேலம் அரசு ஐ.டி.ஐ.யில் ‘கடிகார பழுது நீக்கம்’ என்ற 3 மாத குறுகிய பயிற்சி நடைபெற உள்ளது. 10- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் மே 22-ஆம் தேதிக்குள் தங்களுடைய அசல் ஆவணங்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி நேரில் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 75026- 28826 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

சேலம் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

சேலம் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை சேலம்
மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

சேலம் மழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

சேலம் அருகே ஆலையில் திடீர் தீ விபத்து

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் ஊராட்சியில் உள்ள சேகோ ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ பிடித்தது. உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயணைத்தனர். சேகோ ஆலையில் உள்ள பாய்லர் தீ பிடித்தது என தெரிய வருகிறது. இதனால் பெரும் சேதம் காப்பாற்றப்பட்டது.

News May 13, 2024

தலைவாசல்: பெண்ணை தாக்கியவருக்கு தர்ம அடி

image

தலைவாசல் பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி சத்யா என்பவரை, சங்கராபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் கனல்ராஜ்(18) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். விசாரணையில் சத்யா 5 சவரன் செயின் அணிந்திருந்ததை பறிக்கும் முயற்சியில் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அருகில் இருந்த பொதுமக்கள் கமல்ராஜ்-க்கு தர்ம அடி கொடுத்து தலைவாசல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News May 13, 2024

சேலத்தில் 12.6 மி.மீ மழை பதிவு

image

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று(மே 12) பரவலாக கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று சேலம் மாவட்டத்தில் மாலை 5.30 மணி வரை 12.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழையால் மாவட்டத்தின் பல பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 12, 2024

சேலத்தில் நேற்றைய வெயில் நிலவரம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.11) மாவட்டத்தில் அதிகபட்சமாக 100.0 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News May 11, 2024

சேலம் மழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

error: Content is protected !!