India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கலெக்டர் ரா.பிருந்தாதேவி செய்தி குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 26 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நன்கொடையாக வழங்கலாம். மேலும், விவரங்களுக்கு 94434-78024 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது govtmuseumsalem2@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. மாத குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 30ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண்.115 மகிழம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 69,873 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 76.11 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, அணையின் நீர் இருப்பு 38.18 டிஎம்சி. யாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பாலச்சந்தர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி புதிய ஆணையராக ரஞ்சித் சிங் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்கள். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ரா.மகிழ்நன் ஆகியோர் உள்ளனர்.
சேலம், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் வரும் 26ஆம் தேதி மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம், கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், மாநில துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம் கலந்து கொள்கின்றனர். இதில் பாஜக., நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள மாவட்ட தலைவர் சண்முகநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு செய்து
பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் பேராசிரியர்கள்,
ஊழியர்கள் என 8 பேரை சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று (ஜூலை 22) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 58,934 கனஅடியிலிருந்து 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.05 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 37.20 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.