Salem

News July 24, 2024

சேலத்தில் உள்ளூர் விடுமுறை

image

சேலம் மாவட்டம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தது சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலத்திற்கு 3, 7 ஆகிய இரு தினங்கள் உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

News July 24, 2024

தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் 5 ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு AITUC, INTUC, AICCTU, AIUTUC உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

News July 24, 2024

சேலத்தில் புகைப்படக் கண்காட்சி

image

சேலம் திருவாகவுண்டனூரில் அமைந்துள்ள GVN திருமண மண்டபத்தில் இந்திய அரசு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. விழாவில், பாஜகவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் மாநில தலைவர் கோபிநாத்,
பாமக எம்எல்ஏ அருள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

News July 24, 2024

சேலத்தில் பட்ஜெட் குறித்து கருத்து

image

பட்ஜெட் குறித்து சேலம் உணவு எண்ணெய் சங்கத் தலைவர் பி.திருமுருகன் தெரிவிக்கையில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த, 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது, உயர்கல்வி கற்க ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிப்பது வரவேற்கத்தக்கது. முத்ரா கடன் வரம்பு, 10 லட்சத்திலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, புத்தொழில் முனைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி புது வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

News July 24, 2024

சேலத்தில் நாளைய மின்தடை அறிவிப்பு I

image

சேலத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 25) கீழ்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அவை: அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்ப்பட்டி, செம்மண் கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருங்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, தோலூர்…

News July 24, 2024

சேலத்தில் நாளைய மின்தடை அறிவிப்பு II

image

இரும்பாலை, மோகன் நகர், காரைச்சாவடி, தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்தி நகர், தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொன்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட அட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18ஐ முன்னிட்டு ஆகஸ்ட் 3ம்தேதி சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளளது.

News July 23, 2024

சேலம் மாவட்டத்திற்கு மழை

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 10 மணி வரை மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோவையில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது

News July 23, 2024

தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

image

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024- ஆம் ஆண்டிற்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 85266-39467, 99427- 12736, 99441-09416, 98432-75111 என்ற எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம் என அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

மக்களுடன் முதல்வர் கலெக்டர் ஆய்வு

image

சேலம், மேச்சேரி வட்டம், ஓலைப்பட்டி ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!