India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று(மே 5) நடந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் 11,144 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 24 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது. காலை 11 மணியில் இருந்து தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவிகளை கடும் சோதனைக்கு பிறகே தேர்வு எழுத உள்ளே அனுமதித்தனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 351 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள், 18856 மாணவிகள் என 34,908 பேர் தேர்வு எழுதினர். இதில் 14,824 மாணவர்கள் 18,198 மாணவிகள் என மொத்தம் 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.35 சதவீதம் மாணவர்கள், 96.51 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் மாவட்டத்தில் 94.60% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.35 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 96.51% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
சேலம், வீரகனூர் அருகே வெள்ளையூரை சேர்ந்த இளைஞர் கோவிந்தராஜ்(23). இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திய நிலையில், ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் மே 2ம் தேதி தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(மே 5) உயிரிழந்தார். வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி கன்னிமார் கோயில் அருகில் வெயிலின் தாக்கத்தால் புல், பூண்டு எரிவதாக நேற்று(மே 5) அந்த பகுதியில் உள்ள மக்கள் கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையிலான குழு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (மே.5) மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
இன்று (மே.05) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மேட்டூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் பூங்கா மற்றும் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததின் எதிரொலியாக, அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று (மே.05) சுற்றுலா வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர்களின் அனுபவம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே அனுப்பி வருகின்றனர்.
ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி ஊராட்சி தலையாரியூர் பகுதியில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் உள்ளது இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி கேசவ பெருமாள் கோவில் இருந்து யானை குதிரை பசுக்களுடன் பக்தர்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.