India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கான நேர்முகத்தேர்வு நாளை (ஜூலை 31) காலை 10 மணிக்கு சேலம் அம்மாபேட்டையில் உள்ள அண்ணா மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 91542 – 51083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: B.Sc. நர்சிங் அல்லது GNM, ANM, DMLT. மாத சம்பளம்: 16,020 ரூபாய்.
சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை எண் 0427-2777888 மூலமாகவோ, அல்லது வாட்ஸ்அப் எண் – 83003 83003 மூலமாகவோ அல்லது commr.salem@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தெரிவிக்கலாம் என இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த, 7 ஆண்டுகளாக நிரப்பப்படாத பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும். தமிழக அரசு, நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை ஒரு ஐஏஎஸ் அதிகாரியை, பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும் என சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓப்பன் டேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் இன்று எம்எல்ஏ ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்
மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதீப், மாநகர துணை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சீஜோ கிராண்ட் மாஸ்டர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆத்தூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மகுடஞ்சாவடிக்கும், மேட்டூர் இன்ஸ்பெக்டர் அழகு ராணி ஆத்தூர் டவுனுக்கும், தலைவாசல் இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஊத்தங்கரை மகளிர் காவல் நிலையத்திற்கும், வீரகனூர் இன்ஸ்பெக்டர் காந்திமதி தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கும், சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரஞ்சினி வீரகனுருக்கும் என மொத்தம் 63 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கலைச்செல்வி. இவர் திமுகவைச் சேர்ந்தவர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு புகார் தொடர்பாக, இவர் மீது ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், நேற்று விசாரணை நடத்திய சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி அவரது பதவியை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, காவேரிப்பட்டி ஆகிய கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் செல்பி எடுக்க வேண்டாம், காவிரி ஆற்றில் நீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இன்று ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு சுமார் 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி காவேரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காவிரி கரையோரம் பொதுமக்கள் குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, நீச்சல் உள்ளிட்ட எவ்வித செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். உடன் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.கபீர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நகராட்சி, நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.