India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10- ஆம் தேதி அன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். விதியை மீறும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை”- சேலம் மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை!
சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியின் கால அளவு 30 நாட்கள்; தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி ஏப்.09 ஆகும். மேலும் – தொடர்புக்கு 75503-69295, 95666-29044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வார இறுதி நாட்கள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து ஓசூர், சிதம்பரம், திருவண்ணாமலை, கோவை, சென்னை, பெங்களூரு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களைப் பூர்த்திச் செய்யும் பொருட்டு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்த ஐஸ் வாட்டர் குடிப்பதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதிலிருந்து விடுபட மண் பானையில் வைக்கப்பட்ட நீரை அருந்தலாம். இதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாது சத்துக்கள் ஜீரண சக்தியை உருவாக்கும் என சேலம் மருத்துவர் தனபால் அறிவுறித்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
ஓமலூர் பல்பாக்கியை சேர்ந்தவர் நல்லதம்பி (60). இவர் தனது உறவினரான சித்தையன், 73. என்பருடன் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி டூவீலரில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னாள் சென்ற டிப்பர் லாரி திடீரென திரும்பியதால், டூவீலர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த நல்லதம்பி உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு காரணமாக, ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) ஏப்ரல் 08, 15 ஆகிய நாட்களில் மதியம் 02.45 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 03.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
“சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மண்டலங்களிலுள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்” என்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
எடப்பாடியை சேர்ந்த பாக்கியம், அவரது கணவர் பழனிச்சாமி ஆகியோர், மேட்டூரில் ‘திருமண தகவல் மையம்’ என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற மேட்டூர் போலீசார், தம்பதியினரை கைது செய்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்களை மீட்டனர். மேலும், ஓமலூர் பெண்கள் காப்பகத்தில் அந்த பெண்களை ஒப்படைத்தனர்.
பாம்பன் பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால் சேலம் வழியாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயிலும், ஓஹா- ராமேஸ்வரம் ரயிலும் பழையபடி ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கோவை-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16618) நாளை (ஏப்ரல் 08) இயக்கத்தில் பாம்பன் பாலம் வழியே ராமேஸ்வரம் செல்கிறது.
Sorry, no posts matched your criteria.