India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏத்தாப்பூரில் உலகிலேயே மிக உயரமான 146 அடி முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதை ஒட்டி நேற்று ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம சமுத்திரம் கிராமத்தில் முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் பாரம்பரிய நெல் வகைகளும் ஆமணக்கு உளுந்து கண்காட்சியில் இடம்பெற்றது. இதில் சுற்றுவட்டார விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் ஜூன் 8- ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் விரைவாக சமரசம் முறையில் தீர்வு காணலாம். இதில் சமரசம் செய்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம், அரியனூரில் அமைந்துள்ள 1008 லிங்கம் கோவில். இக்கோயில் விநாயகா மிஷனால், 2010ல் கட்டப்பட்டது.
இக்கோயிலில் மூலவரை சுற்றி, கோயில் முழுவதும், 1007 சிவலிங்கங்கள் உள்ளன. மேலும், இங்கு புனித பசு நந்தியின் சிலை உள்ளது. மலையடிவாரத்தில் பெரிய விநாயகர் சிலையும் உள்ளது. இங்கு சங்ககிரி மலையை காணமுடியும். பிராதான லிங்கத்தின் உயரம் சுமார் 17 மீட்டராக உள்ளது.
சேலம் சுற்று வட்டார பகுதிகளில் எஸ்விஎஸ் நகை கடை நடத்தி வந்த சபரி சங்கர் என்பவர் பொதுமக்களிடம் 100 கோடி பணத்தை வசூல் செய்து விட்டு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தலை மறைவானார். இதுகுறித்து பொதுமக்கள் சேலம் தருமபுரி ஆகிய பகுதியில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சபரி சங்கரை தேடி வந்த நிலையில் புதுச்சேரியில் அவரை இன்று கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் சிலுமலையில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் நாட்டு ரக பாக்குச்செடி , மல்லிகை செடி, எலுமிச்சை செடி உள்ளிட்டவைகளும் , மருத்துவக் குணம் வாய்ந்த செடிகளும் விற்பனைக்கு தயாராக உள்ளது.
விவசாயிகள் நேரில் வந்து பார்வையிட்டு செடிகளை பெற்றுக் கொள்ளலாம் என பண்ணை மேலாளர் மதுமிதா தெரிவித்துள்ளார்.
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி ஓட்டுதல் உள்ளிட்ட விதி மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 4 மாதத்தில் செல்போன் பேசிய படி வாகனங்கள் இயக்கிய 151 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக்கூறி ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த பிடிஎம் குரூப் ஆஃப் நிறுவனம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது. கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து 3000 பேரிடம் பணமோசடி செய்ததாக புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொலைபேசி அழைப்பு மூலம் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகவல்லி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 2 மருந்துக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 7 கடைகளுக்கு ரூ.6.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 4 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.