India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் ஊராட்சியில் உள்ள சேகோ ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ பிடித்தது. உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயணைத்தனர். சேகோ ஆலையில் உள்ள பாய்லர் தீ பிடித்தது என தெரிய வருகிறது. இதனால் பெரும் சேதம் காப்பாற்றப்பட்டது.
தலைவாசல் பட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி சத்யா என்பவரை, சங்கராபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் கனல்ராஜ்(18) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். விசாரணையில் சத்யா 5 சவரன் செயின் அணிந்திருந்ததை பறிக்கும் முயற்சியில் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அருகில் இருந்த பொதுமக்கள் கமல்ராஜ்-க்கு தர்ம அடி கொடுத்து தலைவாசல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று(மே 12) பரவலாக கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று சேலம் மாவட்டத்தில் மாலை 5.30 மணி வரை 12.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழையால் மாவட்டத்தின் பல பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.11) மாவட்டத்தில் அதிகபட்சமாக 100.0 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.10) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.0 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள 56 அடி உயரமுள்ள ராஜமுருகன் சிலையின் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில , பக்தர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் முருகனின் சிலையை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளதாக அக்கோயிலின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி- JUSTNOW SALEM
சேலம் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் மத்திய சிறையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 23 சிறை கைதிகள் எழுதிய நிலையில் 23 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சேலம் மத்திய சிறையிலிருந்து தேர்வு எழுதி 100% தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறையாகும். தேர்ச்சி பெற்றவர்களை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் நேரில் அழைத்து பாராட்டினார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.64% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.81 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.22 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் சேலம் மாவட்டம் 18ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.