India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து சட்டவிரோத பார் குறித்து நேற்று(மே 16) டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை, நரசிங்கபுரம், ஏத்தாப்பூர், வாழப்பாடி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்ட 4 பாரை பூட்டி பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து, மது விலக்கு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட கடம்பூர் ஊராட்சி இரண்டாவது வார்டு பகுதியில் சேகர் என்பவர் 10 வருடங்களாக பட்டாசு உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். இன்று பட்டாசு உற்பத்தி செய்ய பத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 10க்கும் மேற்பட்டவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆத்தூரில் 8 செ.மீட்டரும், தலைவாசல், கரியகோவில் அணை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சங்கரிதுர்க்கம், மேட்டுர், ஆனைமடுவு, சந்தியூர் KVK AWS ஆகிய பகுதிகள் 2 செ.மீட்டர் மழைப் பதிவானது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில கிக்பாக்சிங் போட்டி நடந்தது. இதில் சேலம் மாவட்டம் சார்பில் அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கத்தை சேர்ந்த 28 பேர் கலந்து கொண்டனர். இதில் 8 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்தனர்.
தங்கப்பதக்கம் வென்ற வீரர்கள் வருகிற 2-1ந்தேதி புனேயில் நடைபெறும் தேசிய போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஏற்காட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அடிக்கடி மழை பெய்வது வழக்கமாகி விட்டது. இதனால் ஏற்காட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளுவென மாறியுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலாப் பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
திமுக ஒன்றிய செயலாளர் மிரட்டிய வழக்கில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வத்துக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி இன்று (மே.15) உத்தரவிட்டுள்ளது.
தினந்தோறும் சேலத்தில் உள்ள கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் நெய்க்காரப்பட்டி மேம்பாலத்தின் வழியாக சரக்கு வேன் ஒன்றில் தகர அட்டைகள் கொண்டு சென்ற போது பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென தகர அட்டை சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு ஆட்டுக்குட்டியை சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அருகில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் நகர செயலாளர் மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. வானம் இருள் சூழ்ந்து பனி மூட்டமும் அதிகளவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், அங்கு கடுங்குளிர் நிலவி வருகின்றது. மேலும் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 95.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.