India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கோட்டத்தில் இருந்து முக்கிய தினங்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றும் (மே.18), நாளையும் (மே.19) வார இறுதி நாட்கள் (ம) 19ந் தேதி வளர்பிறை முகூர்த்த தினம் வருகிறது. இதை முன்னிட்டு இன்று முதல் 20ந் தேதி வரை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், கோரிமேட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உள்ளது. இந்த மையத்தில் தற்போது டிஎன்பிஎஸ்சி., டிஆர்பி., போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் (மே.17) நேற்று மாதிரி தேர்வு நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் (மே17) இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. அப்போது, “தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் தனி கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு ஆட்சியர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக சேலம் மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி நீர்வீழ்ச்சியில் குளித்தும், புகைப்படங்களை எடுத்தும் மகிழ்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை சேலத்தில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் பெரியார் பல்கலை. ஓய்வுபெற்ற பதிவாளர் தங்கவேலுவுக்கு ரூ.1 லட்சம் ஓய்வூதியம் வழங்க பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராசிரியர்கள், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரூ.1 லட்சம் ஓய்வூதியம் வழங்கும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சேலத்தில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம், மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் இயங்கி வரும் அரசு நீச்சல் குளம் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து இன்று(மே 17) முதல் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது. கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி கட்டணத் தொகையினை இணையதளம் மற்றும் ஏடிஎம் கார்டு, ஜிபே, போன்பே வாயிலாகவும் செலுத்தலாம் என சேலம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பிரிவு தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று(மே 17) மதியம்1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை தொடங்கியது முதல் ஆங்காங்கே மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.