Salem

News May 19, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கோடை திருவிழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News May 19, 2024

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சேலம், ஏற்காடு கோடை விழா வருகின்ற மே.22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஏற்காட்டிற்கு செல்வதற்கு சேலத்தில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஏற்காடு சுற்றி பார்க்கும் வகையில் மூன்று உள்வட்ட பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் அதிக அளவில் ஏற்காடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 19, 2024

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

சேலத்தில் குண்டுமல்லி கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் வரத்து குறைவின் காரணமாகவும், இன்று முகூர்த்த தினம் என்பதாலும் அதிரடியாக விலை உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.360க்கு விற்கப்பட்ட குண்டு மல்லி, நேற்று ஒரே நாளில் ரூ.140 உயர்ந்து 1 கிலோ ரூ.500க்கு விற்பனையானது. அதேபோன்று ரூ.200க்கு விற்கப்பட்ட சன்னமல்லி, பட்டர் ரோஸ் நேற்று ரூ.400க்கு விற்கப்பட்டன.

News May 19, 2024

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

image

சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியில் தமிழக அரசின் சார்பில் பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.‌ அங்கு இக்கல்வியாண்டில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 07.06.2024 வரை விண்ணப்பிக்கலாம் என‌ மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

சேலம் அருகே அருவியில் குளிக்க தடை

image

ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து
அதிகரித்து வரும் காரணமாக மறு உத்தரவு வரும் வரை ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி மற்றும் படகு சவாரி ஆகியவற்றிற்கு தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

News May 18, 2024

இளம்பிள்ளை அருகே தவ மையம் திறப்பு

image

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயில் சார்பில் ராமாபுரம் மாரியம்மன் கோயில் திடலில் தவ மையம் திறப்பு விழா வருகிற 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் காயகல்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News May 18, 2024

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

image

சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியில் தமிழக அரசின் சார்பில் பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.‌ அங்கு இக்கல்வியாண்டில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 07.06.2024 வரை விண்ணப்பிக்கலாம் என‌ மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

கோடை விழா: கலெக்டர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி வரும் 22.5.2024 அன்று தொடங்கி 26.05.2024 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் 8 முதல் 10 நாட்கள் வரை நடைபெற்ற கோடை விழா இந்த ஆண்டு 5 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News May 18, 2024

சேலம் மழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

image

சேலம், முட்டல் நீர்வீழ்ச்சியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வந்த நிலையில் பொதுமக்கள் குளித்து வந்தனர். இதனை அடுத்து குற்றாலத்தில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து இன்று முதல் முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!