India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
47-வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியினை முன்னிட்டு, வரும் மே 22- ஆம் தேதி முதல் மே 26- ஆம் தேதி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள திரையரங்கில் காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பல்வேறு புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இத்திரைப்படங்களை பார்க்க அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம், சூரமங்கலம் போலீசார் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகில் பைக் ஓட்டி வந்த 13-வயது சிறுவனை நிறுத்தி விசாரித்தனர். அதில், அவனது தாயார் விஜயா என்பவர் வாகனம் ஓட்ட அனுமதி கொடுத்து அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார் வாகன சட்டத்தின்படி சிறுவனின் தாயாருக்கு ரூ.6ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47- வது கோடைவிழா வரும் மே 22- ஆம் தேதி துவங்குவதையொட்டி , 7 இடங்களில் 4 சக்கர வாகனங்களை நிறுத்தவும், 2 இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 15 இடங்களில் மொபைல் டாய்லெட்கள் வைக்கப்படுகிறது. மேலும் மலைப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், சேதமடைந்த மின் கம்பிகள், மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் இதர சேதம் அடைந்த மின் சாதனங்கள் குறித்து மின்னகத்திற்கு 94987-94987 என்று எண்ணில் பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
சேலம் ஆத்தூர் உழவர் சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி 80 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்த பீன்ஸ் விலை இன்று இரண்டு மடங்கு விலை ஏற்றப்பட்டு 160 ரூபாய்க்கு 1 கிலோ பீன்ஸ் விற்பனையாகி வருகிறது. பொதுமக்கள் பீன்ஸ் விலை பார்த்தவுடன் தங்கம் விலை ஏறுவது போல் ஏறிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்கள். தற்பொழுது மழை வந்து கொண்டிருப்பதால் பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார தாலுகா முழுவதும் நேற்று 293.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் சேலம் அருகே உள்ள பெத்த நாயக்கன் பாளையம் அம்மன் தாலுகாவிற்கு உட்பட்ட கரியகோவில் பகுதியில் 69 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. இந்த பகுதியில் மழை அதிகமாக பெய்ததால், முட்டல் பகுதி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடுகிறது.
ஆரியபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2002ல் பத்தாம் வகுப்பு படித்த மாணவ- மாணவிகள், 21 ஆண்டுக்குப் பின் நேற்று அதே பள்ளியில் ஒன்றுகூடி சந்தித்து கொண்டனர். அப்போது, பள்ளி பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். 2002ல் பாடம் நடத்திய ஆசிரியர்கள் சற்குணம், முத்துராமராஜா , வரதராஜ் ஆகியோரையும் வரவழைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டி நெகிழ வைத்தனர். தொடர்ந்து பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கினர்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையை அனுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழாவையொட்டி சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 8:30 மணி முதல் இரவு 7 மணி வரை ஏற்காட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் வகையில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்திற்கு 300 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு www. tnstc. in (or) tntstc.bus.ticket booking.App என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
சேலம், குரும்பப்பட்டி கிராமம், சின்னநாச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கார்த்திக் (28). இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் டாக்டர் ராமதாஸ் குறித்து சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வைத்து அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.