Salem

News May 23, 2024

சாயப்பட்டறைகள் மின் இணைப்பு துண்டிப்பு

image

சேலம், ஜாரிகொண்டலாம்பட்டி ,அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் சாய பட்டறைகள் இயங்கி வந்த நிலையில், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமலே வெளியேற்றி வருவது என்று பல்வேறு தரப்பினர் புகார் கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து வந்த நிலையில், உடனடியாக அதிகாரிகள் சாயப்பட்டறை மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் 2 சாயப்பட்டறைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

News May 23, 2024

இந்திய மருத்துவ சங்க குழு தேசிய ஒருங்கிணைப்பாளர் நியமனம்

image

இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் ஆண்டி மைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ் குழு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாட்டை தடுக்கும் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சேலம் ஜாகிர் அம்மாபாளத்தை சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் மூத்த தலைவரான டாக்டர்கள் அசோகன் அபுல்ஹாசன் பிரகாசம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

News May 22, 2024

சேலம்: வெயிலின் தாக்கம் 92.4 டிகிரியாக பதிவு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.22) மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News May 22, 2024

சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி கையேடு 

image

47-வது ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி இன்று (மே 22) தொடங்க உள்ளதையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி கையேடு QR கோடு முறையில் அச்சடிக்கப்பட்டு ஏற்காடு அடிவாரம் சோதனை சாவடியைக் கடக்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

News May 22, 2024

ஏற்காட்டில் நுழைவுக் கட்டணம் உயர்வு

image

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47- வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரோஜா தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறுவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.15 ஆக இருந்த நிலையில், ரூ.25 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.30 ஆக இருந்த கட்டணம், ரூ.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News May 22, 2024

ஏற்காட்டில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

image

47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி இன்று தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். மலர்கள், பழங்கள், காய்கறிகளால் அமைக்கப்பட்டுள்ள அலங்காரங்களை கண்டு வியந்த சுற்றுலாப் பயணிகள், செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.

News May 22, 2024

சேலம் : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

image

சேலம், ஜலகண்டாபுரம் பேருந்து நிலையத்தில் மேட்டூர் செல்லும் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஜலகண்டாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 21, 2024

270 தேர்வு மையங்கள் அமைப்பு

image

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்காக, சேலம் மாவட்டத்தில் 270 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,06,082 பேர் தேர்வு எழுதவுள்ளனர். வரும் ஜூன் 9- ம் தேதி காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ள தேர்வை கண்காணிக்க 89 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News May 21, 2024

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு 

image

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கரியக்கோவில் பகுதியில் 69 மி.மீட்டர்
(6.9சென்டிமீட்டர்) மழை பதிவாகியது. அதன்படி மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மிமீ) ஏற்காடு -28.6, வாழப்பாடி-31.6, அணைமேடு-10, ஆத்தூர்-6, கெங்கவல்லி-20, தம்மம்பட்டி-8, ஏத்தாப்பூர்-22. 6, வீரகனூர்-6, நத்தக்கரை 10, சங்ககிரி-14.4, எடப்பாடி-33, மேட்டூர்-16.2, ஓமலூர்-15.6, டேனிஷ்பேட்டை-2.6. என்ற அளவில் மழை பெய்தது.

error: Content is protected !!