India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் 2024 நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் மே 22 – ஆம் தேதி வரை சராசரியாக 161.47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத்தொடர்ந்து மேலும் கடந்த 2023 – ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 63.01 மில்லி மீட்டர் அளவிற்கு மழை குறைந்துள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஐந்து நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விமரிசையாக நடைபெற்று 47 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையினை ஏற்று வரும் 30 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இன்று(மே 25) அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.24) மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம், சங்ககிரி அக்ரஹாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ஷில்பா என்கிற சுகமதி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது இரு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்குப்பதிவுச் செய்த சங்ககிரி காவல்துறையினர் கணவர் கோகுலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலத்தில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் கிழக்கு மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் கனமழையால், நான்கு வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 4 குடும்பத்திற்கு தலா 5,000 வீதம், 20 ஆயிரம் ரூபாய் பணம் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டது.
இதை மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டில், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் வழங்கினார்.
பழைய ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்திருந்த நிலையில், சேலம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சபிர் என்பவருடைய அவருடைய வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சபீர் கைது செய்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓமலூர் – காருவள்ளி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, காரைக்கால்- எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் (16530) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாளை (சனிக்கிழமை) முதல் ஆகஸ்டு 20ந் தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 75 நாட்களுக்கு 45 நேரம் தாமத பராமரிப்பு கடைபிடிக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.
சேலம், ஏற்காடு கோடை விழாவையொட்டி 3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. காலை 6.30 மணிக்கு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்கும் கொண்டப்பநாயக்கன்பட்டி, குண்டூர் முதல் ஏற்காடு வரை மலை ஏறுதல் போட்டி நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் பூங்காவில் சைக்கிள் போட்டியும் நடைபெறுகிறது.
மழை, காற்றினால் சாலையில் மரங்கள் ஏதேனும் சாய்ந்தால் உள்ளாட்சி அமைப்பினர், நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினர் அவ்விடத்திற்கு சென்று உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர்செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.