Salem

News January 27, 2025

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து- மக்கள் தர்மஅடி

image

சேலம் மாவட்டம், பூலாம்பட்டி சந்தையில் இன்று (ஜன.27) மதியம் மது அருந்திவிட்டு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய 4 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சாலையோரம் இருந்த கடைகள் சேதமடைந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனவும் தகவல். 

News January 27, 2025

இ.பி.எஸ். மீதான வழக்குக்கு தடை

image

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் விவரங்களை மறைத்து விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க கீழமை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

News January 27, 2025

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

குடியரசுத் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஆத்தூர், மேட்டூர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், அதிகாரிகள் நேற்று (ஜன.26) நடத்திய ஆய்வில் இயங்கிய 34 கடைகள் உள்பட் 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

News January 27, 2025

“முதலமைச்சர்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது சேலம்” 

image

சேலத்தில் நேற்று வைரமுத்து பேசுகையில், “சேலத்தில் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்பதை தமிழ்நாட்டு வரலாறு மறந்து விடக்கூடாது. கலைஞரும், எம்.ஜி.ஆரும் சேலத்தின் காற்றை சுவாசித்து, சேலத்தின் தண்ணீரை குடித்து, சேலத்தின் சோற்றை உண்டு தான் தங்கள் கனவுகளையும், தகுதிகளையும், ஆற்றலையும், லட்சியங்களையும் வளர்த்துக் கொண்டார்கள். இது லட்சிய பூமி என்றார். 

News January 27, 2025

“காதலுக்குரிய பூமி சேலம்” 

image

சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, “எங்கள் காதலுக்குரிய பூமி சேலம், உழைப்பாளிகளின் பூமி, சேலம் உருக்காலையின் பூமி; ஒரு பக்கம் கனி, இன்னொரு பக்கம் கனிமம், கனி கொண்ட ஊரும், சேலம் தான். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற கலைக்கூடத்தை நிறுவி கலை கொண்ட ஊரும் சேலம் தான்” என பேசினார்.

News January 26, 2025

மாவட்ட இரவு காவல் ரோந்து பணி விபரம்

image

ஹசேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜன. 26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 26, 2025

சேலத்தில் ரஞ்சி டிராபி: தமிழ்நாடு அணி அபார வெற்றி

image

குரூப் டி பிரிவில் சேலத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், சண்டீகர் அணியும் பலப் பரீட்சை நடத்தியது. இதில் சண்டீகர் அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபாரமாக வீழ்த்தி அசத்தியிருக்கிறது. சேலத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 26, 2025

சேலம் மாணவர்களே அப்ளை பண்ண மிஸ் பண்ணிடாதீங்க

image

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய வருவாய் வழி, திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுவோருக்கு 9 முதல் 12 வரை மாதம் 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வு வரும் பிப்.22- ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க ஜன.29 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்யூங்கள். 

News January 26, 2025

காவலர் பதக்கங்களை வழங்கிய ஆட்சியர்

image

சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜன.26) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். விழாவில் காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 26, 2025

வண்ண பலூன்களைப் பறக்கவிட்ட மேயர்

image

சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (ஜன.26) நடைபெற்ற 76வது குடியரசுத் தின விழாவில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். விழாவில், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., துணை மேயர் சாரதாதேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!