India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓமலூர் பெரியார் பல்கலைக்கழக குடிமையியல் பணித்தேர்வு பயிற்சி வழிகாட்டுதல் மையம் மற்றும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்துடன் இணைந்து எதிர்வரும் TNPSC குரூப்-2 தேர்விற்கான ஒரு மாதகால சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன. மாணவர்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு பெரியார் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி, தொழில் நிறுவனங்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் (அ) இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி செயல்பட்ட 103 நிறுவனங்கள் மீது வழக்குபதிவு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வரும் 19ஆம் தேதி திங்கள்கிழமை ஆவணி பௌர்ணமி முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வசதியாக சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் 18ம் தேதி முதல் 19ம் தேதி வரை 1 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் கடந்த 42 மாதங்களில் 22,707 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் சென்னை!
சேலம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக கெங்கவல்லி, எடப்பாடி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைவாசல் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக ஆறகளூர், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, தலைவாசல், இலுப்பநத்தம், தென்குமரை தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காபாளையம், நத்தக்கரை, பெரியேரி, கோவிந்தம்பாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!
சேலம், ஓமலூர் வட்டம், சாமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் இன்று (15.08.2024) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் இரா.பிருந்தாதேவி, பார்வையாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, ஊராட்சி மன்ற தலைவர் எ.சின்னதுரை ஆகியோர் உள்ளனர்.
சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி, தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவித்தார். உடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர
தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். உடன் சேலம் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.